முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜிம்பாப்வேயை இந்திய அணி ஒயிட் வாஷ் செய்யுமா?

வெள்ளிக்கிழமை, 2 ஆகஸ்ட் 2013      விளையாட்டு
Image Unavailable

 

புலவாயோ, ஆக. 3 - இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிக ளுக்கு இடையேயான 5-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று புலவா யோ நகரில் நடக்கிறது. முன்னதாக நடந்த 4 ஆட்டத்திலும் இந் திய அணி வெற்றி பெற்றதால் இந்தப் போட்டியிலும் வெற்றி பெற்று ஜிம் பாப்வேயை ஒயிட் வாஷ் செய்யுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

கேப்டன் விராட் கோக்லி தலைமையி லான இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பா ப்வேயில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கேப்டன் பிரண்டன் டெய்லர் தலை மையிலான அணிக்கு எதிராக விளை யாடி வருகிறது. 

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிக ளுக்கு இடையே 5 போட்டிகள் கொ  ண்ட ஒரு நாள் தொடர் நடந்து வருகிறது. இதில் ஏற்கனவே 4 ஆட்டம் முடிந்து விட்டது. 

முன்னதாக முடிந்த 4 ஆட்டத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியதுடன் 4 -0  என்ற கணக்கில் அசைக்க முடியாத முன்னிலையில் உள்ளது. 

இந்நிலையில் இந்தியா மற்றும் ஜிம் பாப்வே அணிகளுக்கு இடையேயான 5- வது மற்றும் கடைசி ஒரு நாள் போ  ட்டி இன்று புலவாயோ நகரில் நடக்கிறது. 

எனவே இந்தக் கடைசி ஆட்டத்திலும் இந்திய அணி மகத்தான வெற்றி பெற் று ஜிம்பாப்வே அணியை ஒயிட் வாஷ் ஆக்குமா என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர் கள் உள்ளனர். 

இந்திய அணி கடந்த சில வருடங்களுக் கு முன்பு கேப்டன் சுரேஷ் ரெய்னா தலைமையில் ஜிம்பாப்வேயில் சுற்றுப் பயணம் செய்து ஒரு நாள் போட்டியில் ஆடியது. 

அப்போது ஜிம்பாப்வே அணி 2 ஆட்ட த்தில் வெற்றி பெற்றது. இது இந்திய அணிக்கு பலத்த அடியாகும். அதற்கு பழி வாங்கும் வகையில் இநதத் தொட ரில் ஆடி வருவது குறிப்பிடத்தக்கது. 

இந்தத் தொடரில் முதல் 2 ஆட்டத்தில் இந்தியஅணி தரப்பில் கேப்டன் விராட் கோக்லி மற்றும் துவக்க வீரர் ஷிகார் தவான் இருவரும் சதம் அடித்து அணியை வெற்றி பெற வைத்தனர். 

கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடந்த 4-வது ஆட்டத்தில் ரோகித் சர்மா மற்று ம் சுரேஷ் ரெய்னா இருவரும் அரை சத ம் அடித்து அணிக்கு வெற்றி தேடித் தந் தனர். 

தவிர, அந்தப் போட்டியில் அமித் மிஸ் ரா, ஜடேஜா, மொகித் சர்மா, மொக மது சமி மற்றும் உனாட்கட் ஆகியோர் அடங்கிய கூட்டணி சிறப்பாக பந்து வீசி அணிக்கு வெற்றி தேடித் தந்தது. 

இந்தத் தொடரில் வினய் குமார் மோச மாக பந்து வீசி வந்ததால் கடந்த ஆட்டத்தில் அவர் நீக்கப்பட்டு மொகித் சர் மாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அவரும் அதற்கேற்றார் போல பந்து வீசி 2 விக்கெட் கைப்பற்றினார். 

இந்திய வீரர்கள் முழு தன்னம்பிக்கையு டன் களம் இறங்குகின்றனர். எனவே இந்த ஆட்டத்திலும் இந்திய அணி வெற் றி பெற்று முத்திரை பதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்