முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சச்சினும் - லாராவும் சமம்தான்: ஸ்டீவ் வாக் சொல்கிறார்

வெள்ளிக்கிழமை, 2 ஆகஸ்ட் 2013      விளையாட்டு
Image Unavailable

 

பெங்களூர், ஆக. 3 - சச்சின் டெண்டுல்கரும் சரி, பிரையன் லாராவும் சரி, யாரும் யாருக்கும் இளைத்தவர்கள் அல்ல. இருவரும் சரிசமமான பலம் உடையவர்கள், திறமை படைத்தவர்கள் என்று புகழாரம் சூட்டியுள்ளார் முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் வாக். 

ரொம்ப காலமாகவே சச்சின், லாரா குறித்த விவாதங்கள் தொடர்ந்து கொண்டுள்ளன. இதற்கு முடிவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. சமீபத்தில் கருத்து தெரிவித்த ரிக்கி பான்டிங், சச்சினை விட லாராதான் அவரது நாட்டு அணிக்கு நிறைய வெற்றிகளைத் தேடிக் கொடுத்தவர் என்று கூறி பிரச்சினையை மீண்டும் கிளப்பி விட்டுள்ளார். இந்த நிலையில் இன்னொரு ஆஸ்திரேலிய ஜாம்பவானான ஸ்டீவ் வாக், சச்சின், லாரா இருவருமே சமமானவர்கள் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

சச்சினையும், லாராவையும் ஒப்பிடவே கூடாது. இருவரும் திறமை படைத்தவர்கள்தான். அவர்களை ஒப்பிடுவது சர்ச்சையையே ஏற்படுத்தும். இருவரும் சமமானவர்கள் இருவரும் சம அளவிலான திறமை படைத்தவர்கள். இருவரும் வேறு வேறு சூழ்நிலையில் விளையாடியவர்கள். இருவரையும் நான் ஒன்றாகத்தான் பார்க்கிறேன். சச்சினும் சரி, லாராவும் சரி அசாத்தியமான திறமை படைத்தவர்கள். இருவருமே தங்களது அணிகளுக்கு முக்கிய வீரர்களாக திகழ்ந்துள்ளனர். சச்சின் டெண்டுல்கர் 100 கோடி மக்களின் நம்பிக்கையை தோளில் சுமந்து ஆடுகிறார். அவர் மீது அத்தனை இந்தியர்களும் பெரும் நம்பிக்கை வைத்துள்ளனர். இந்த கடுமையா அழுத்தத்திற்கு மத்தியிலும் அவர் ஜொலிப்பது மிக முக்கியமானது.

மறுபக்கம் பலவீனமான ஒரு அணியின் முக்கிய வீரராக திகழ்ந்தவர் லாரா. சாம்பியன் வீரராக திகழ்ந்தவர் அவர். சச்சின் ஓய்வு குறித்தும் பேசத் தேவையில்லை. எந்த வீரராக இருந்தாலும் ஒரு நாள் ஓய்வு பெறத்தான் போகிறார்கள். இதை ஏன் பப்ளிக்காக விவாதிக்க வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. கேப்டன் தோனி தனது மாயாஜால திறமையால் இந்திய அணியை சிறப்பாக வழி நடத்திச் செல்கிறார். அவர் தவறு செய்வது என்பது மிக மிக அரிதாக உள்ளது. இந்திய கேப்டனாக இருப்பது, அதிலும் திறமையாக செயல்படுவது என்பது மிக மிக கடினமானது. ஆனால் தோனி அதை எளிதாக செய்கிறார் என்றார் வாக்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago