முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்பெக்ட்ரம்: யுனிடெக் நிர்வாக இயக்குனருக்கு நோட்டீஸ்

வெள்ளிக்கிழமை, 2 ஆகஸ்ட் 2013      அரசியல்
Image Unavailable

 

புது டெல்லி, ஆக. 3 - ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ஜாமீனை ரத்து செய்யக் கோரும் சி.பி.ஐ. மனு மீது பதிலளிக்க யுனிடெக் நிர்வாக இயக்குநர் சஞ்சய் சந்த்ராவுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை உரிமத்தை யுனிடெக் நிறுவனம் முறைகேடாக பெற்றது.. யுனிடெக் நிறுவனத்துக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் ஆ. ராசா செயல்பட்டார் என்பது சி.பி.ஐ. வழக்கு. இந்த வழக்கில் சி.பி.ஐ. வழக்கறிஞர் ஏ.கே. சிங்குடன் யுனிடெக் எம்.டி.யான சஞ்சய் சந்த்ரா ரகசியமாக பேசிய டேப் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து ஏ.கே. சிங் நீக்கப்படுவதாக சி.பி.ஐ. அறிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட் சஞ்சய் சந்த்ராவுக்கு ஏற்கெனவே வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக் கோரி சி.பி.ஐ. மனுத்தாக்கல் செய்தது. இம்மனுவை ஏற்றுக் கொண்ட சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சிங்வி மற்றும் முகோபாத்யாயா பெஞ்ச் 2 வாரங்களுக்குள் பதிலளிக்க சஞ்சய் சந்த்ராவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்