முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சஞ்சய் சந்திராவின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி மனு

ஞாயிற்றுக்கிழமை, 4 ஆகஸ்ட் 2013      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, ஆக. 4 - 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள யுனிடெக் நிறுவன மேலாண்மை இயக்குனர் சஞ்சய் சந்திராவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரிய சி.பி.ஐயின் மனு மீது இரண்டு வாரங்களில் அவர் பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஜி.எஸ்.சிங்வி தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது. அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கு விசாரணை டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. சஞ்சய் சந்திராவும் வழக்கின் தொடக்கத்தில் சி.பி.ஐ. வழக்கறிஞராக ஏ.கே. சிங்கும் நீதிமன்றத்துக்கு வெளியே தனியாகவும், தொலைபேசி வாயிலாகவும் வழக்கு தொடர்பாக பேசியதாக சி.பி.ஐ. குற்றம் சாட்டியது. அது தொடர்பாக ஏ.கே. சிங்கின் தொலைபேசியை இடமறித்து கேட்ட போது சஞ்சய் சந்திராவுடன் அவர் பேசிய விவரங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாகவும் சி.பி.ஐ. கூறியது. 

அதையடுத்து அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் ஆஜராகும் பொறுப்பில் இருந்து ஏ.கே. சிங் விடுவிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக கே.கே. கோயல் என்ற வழக்கறிஞர் தற்போது ஆஜராகி வருகிறார். இதற்கிடையே ஜாமீனில் விடுவிக்கப்பட்ட காலத்தில் வழக்கை பலவீனப்படுத்தும் வகையில் சஞ்சய்சந்திராவின் செயல்பாடு அமைந்துள்ளது. வழக்கில் முக்கிய சாட்சியாக கருதப்படும் மத்திய தொலை தொடர்பு துறை முன்னாள் துணை தலைமை இயக்குனர் ஏ.கே. ஸ்ரீவத்சவாவின் குறுக்கு விசாரணை நடைபெற்ற காலத்தில் சி.பி.ஐ. வழக்கறிஞருடன் சஞ்சய் சந்திரா பேசியுள்ளார். 

ஜாமீன் நிபந்தனைகளை சஞ்சய் சந்திரா மீறியுள்ளதால் 2011 நவம்பர் 23 ம் தேதி அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. மனு தாக்கல் செய்தது. 

எஸ்ஸார் டெலிஹோல்டிங்ஸ் நிறுவனம் குசேகன் புரூட்ஸ் அன்ட் வெஜிடபிள்ஸ் நிறுவன இயக்குனர் ராஜீவ் அகர்வால் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகளை மத்திய தொலை தொடர்பு துறை முன்னாள் அமைச்சர் ஆ. ராசா உள்ளிட்டோருக்கு எதிரான வழக்குடன் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்களை நீதிபதி ஓ.பி. ஷைனி விசாரித்தார். பின்னர் இந்த மனு தொடர்பாக ஆகஸ்ட் 12 ம் தேதிக்குள் பதில் அளிக்க சி.பி.ஐ. க்கு நீதிபதி அனுமதி வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்