முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை கடற்படை மீனவர்களை கைது செய்ததால் பதற்றம்

ஞாயிற்றுக்கிழமை, 4 ஆகஸ்ட் 2013      உலகம்
Image Unavailable

 

ராமேசுவரம்,ஆக.5 - ராமேசுவரத்தில் கடந்த சனிக்கிழமை கடலுக்கு சென்ற 20 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர் இதனால் அப்பகுதியில் பெறும் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது.  ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் பகுதியில் இருந்து சனிக்கிழமை 250க்கு மேலான விசைப்படகுகளில் மீன்பிடிக்க மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.இவர்கள் தனுஸ்கோடி,கச்சதீவு கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டியிருக்கும்போது அப்பகுதியில் இலங்கை எல்லையில் ரோந்து பணியில் வந்த இலங்கை கடற்படையினர் இந்திய எல்லைக்குள் நுழைந்து மீன்பிடித்து கொண்டியிருந்த ராமேசுவரம் பகுதியை சேர்ந்த செங்கோல்பிச்சை,லிடன், முனியாண்டி,சூசைராஜ், பொன்னுச்சாமி ஆகியோர்களின் படகுகளில் சென்ற மீனவர்கள் முனியசாமி,ராமையா,கருப்பையா,சுரேஸ்,பாக்கியராஜ்,ரீகன்,சுதன்,சரவணன்,சகாயம்,இன்னாசி,இன்னாசிலொயலா,கருப்ாையா,அச்தோணிசாமி,வேலுச்சாமி,பாலமுருகன்,சரவணன் உள்பட 20 மீனவர்களை அத்துமீறி இலங்கை கடற்படையினர் பிடித்து நடுக்கடலில் வைத்து நீண்ட நேரம் விசாரணை செய்து அழைத்து சென்று தலைமன்னார் காவல் நிலையத்தில் ஓப்படைத்து 20 மீனவர்கள் மீது எல்லை தாண்டி வந்ததாக வழக்கு பதிந்து மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்  மீனவர்களை நீண்ட நேரம் விசாரணை செய்த நீதிபதி ஆனந்திகனகரெத்தினம் 15 நாட்கள் சிறைக்காவலில் வைக்க உத்திரவுயிட்டார் அதன் பின் 20 மீனவர்களையும் அனுராதபுரம் சிறைச்சாளையில் அடைத்தனர்.

 

மத்திய அரசின் அலட்சிய போக்கால் அழிந்து வரும் ராமேசுவரம் மீனவர்களின் மீன்பிடித்தொழில்      

 

தமிழக அரசு கடலில் மீன் இனப்பெருக்கத்திற்காக வருடந்தோறும் ஏப்ரல் முதல் மே மாதம் வரை 45 நாட்கள் அரசு இடைக்கால தடை விதிக்கும்.இந்நாட்களில் தமிழகத்தில் மீனவாகள் மீன்பிடிக்க செல்லமாட்டார்கள். அரசு இடைக்கால தடை முடிந்து ஜீன் 1ம் தேதி முதல் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.இரண்டு மதங்களாக இலங்கை கடற்படையினரின் தொடர் கைது நடவடிக்கையால் மீனவர்கள் மீன்பிடிக்க முடியாமல் வருகின்றனர்.மீனவாகள் இந்நிலைமையப்பற்றி மத்திய அரசிடம் எத்தனை முறைகள் புகார் கூடுத்தாலும் ராமேசுவரம்  மீனவர்களைப்பற்றி கண்டுகொள்ளாமல் மவுனம்மாக இருந்து வருகிறது.இந்நிலையில் ஏற்கனவே 7படகுகள் உள்பட 29 மீனவர்கள் இலங்கை சிறையில் இருந்து வரும் நிலையில் நேற்றுக்கு முன்தினம் 5படகுகள் உள்பட20 மீனவர்களை பிடித்திருப்பது ராமேசுவரம் மீனவர்களின் மத்தியில் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இலங்கை கடற்படையினர் மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கையை நிறுத்த  மத்திய அரசு இப்பிரச்சினையை குறித்து எவ்வித நடவடிக்கை எடுக்காமல் வந்தால் ராமேசுவரம் பகுதியை சேர்நத 75ஆயிரம் மீனவர்களின் வாழ்வாதராம் கேள்விக் குறியாகும் நிலைமை ஏற்படும். இந்நிலைமை தொடர்ந்து ஏற்பட்டால் எதிர்காலங்களில் மீன்பிடித்தொழில் அழிந்து விடும் என ராமேசுவரம் பகுதியை சேர்ந்த பாரம்பரிய மீனவர்கள் பெறும் கவலைக்கிடமான சூழ்நிலையில் உள்ளனர்.ஆகையால் மத்திய அரசு உடனடியாக போக்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும மீனவர்கள்; கோரிக்கை வைத்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்