முக்கிய செய்திகள்

பெட்ரோல்-டீசல் விலையை உயர்த்தக்கூடாது - சரத்குமார்

Sarath 2

 

சென்னை, மே.7 - பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தக்கூடாது என்று மத்திய அரசுக்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இன்னும் சில நாட்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் மீண்டும் உயர்த்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கச்சா எண்ணெய் விலை, உலகச்சந்தையில் உயர்ந்திருப்பதை காரணம்காட்டி இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்ரு தவிர்க்க முடியாதது என்று கூறுகின்றனர்.

பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயம் செய்து கொள்ளலாம் என்று அறிவித்தபிறகு, திடீர், திடீர் என விலைகள் உயர்த்தப்பட்டு வருகின்றனர். மத்திய அரசு விலை நிர்ணயம் செய்து கொண்டிருந்தபோது, இருந்ததுபோல் இல்லாமல் எண்ணெய் நிறுவனங்கள் அடிக்கடி  விலைகலை உயர்த்துவது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, குறிப்பாக உணவு பொருட்களுக்கான பணவீக்கம் போன்றவை பொதுமக்களை அச்சுறுத்துவதாக உள்ளது. இந்நிலையில் பெட்ரோல் டீசல் விலைகள் உயர்ந்தால் ஏழை, எளிய, நடுத்தர குடும்பங்கலின் பொருளாதார நிலை மோசமாகிவிடும். உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் இந்திய எண்ணெய் நிறுவனங்களின் லாபங்கள் குறைகின்றன என்று கூறப்படுகிறது. இந்தியர்களின் கருப்புப்பணம் வெளிநாட்டு வங்கிகளில் பல லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றனவே. கணக்கில் வராத பணத்தை மீண்டும் இந்தியாவிற்குள் கொண்டுவந்தால் அதன் மூலம் உள்நாட்டு எண்ணெய் வளத்தை பெருக்குவதோடு, எண்ணெய் நிறுவனங்களின் வருவாய் இழப்பையும் ஈடுகட்ட முடியும் என்பது உண்மைதானே.

கருப்புப்பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு செய்திருக்கும் நாடுகளில் இந்தியா முதலிடம் வகிக்கிறது என்பது வேதனை கலந்த அதிர்ச்சியாக உள்ளது. பொருளாதார வளர்ச்சியின் பலன்கள் தனிநபர்களிடம் சென்று சேர்ந்த குவிவதாலும், ஊழல் மற்றும் பொருளாதார முறைகேடுகளாலும் உருவாகும். கருப்பணம் பெருக்கம், நம் பொருளாதார வளர்ச்சிக்கு உகந்தல்ல். கருப்ப்பண மீட்பு தொடர்பாக மத்திய அரசு மெத்தனம் காட்டுவதை கைவிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க துணிய வேண்டும். மேலும் தமிழகத்தில் மின்வெட்டு மக்களுக்கு உச்சகட்ட இன்னலாக உள்ள நிலையில், டீசல் விலை உயர்வு காரணமாக விவசாயமும் பெருமளவில் பாதிக்கப்படும்.

இதற்கிடையே, பெட்ரோல், டீசல் விலைகளை அடிக்கடி உயர்த்துவதை தவிர்க்க மத்திய நிதியமைச்சகம் ஆலோசனைகளை மேற்கொள்ள வேண்டும். சமத்துவ மக்கள் கட்சி பலமுறை வலியுறுத்தியுள்ளபடி, இந்திய அரசு, வளரும் நாடுகள் சார்பாக, எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்யும் நாடுகளிடம் சில குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு கச்சா எண்ணெய் விலைகளை உயர்த்தாமல் இருக்கும்படி கோரிக்கை வைக்க வேண்டும். மக்கள் நலன்களையும், அவர்களது பொருளாதார சுமைகளையும் மனதில் கொண்டு, எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலைகளை உயர்த்தக்கூடாது என்று சமத்துவ மக்கள் கட்சி சார்பில் கோரிக்கை வைக்கிறேன்.

இவ்வாறு சரத்குமார் அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: