முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தரவரிசைப் பட்டியல்: இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா முதலிடம்

திங்கட்கிழமை, 5 ஆகஸ்ட் 2013      விளையாட்டு
Image Unavailable

 

துபாய், ஆக. 6 - ஐ.சி.சி.வெளியிட்டுள்ள ஒரு நாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலி ல் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா பெள லர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து சாதனை படைத்து உள்ளார். பந்து வீச்சாளர்களுக்கான பட்டியலில் ஜடேஜா 4 இடம் முன்னேறி மே.இ.தீவு வீரரான சுனில் நரீனுடன் இணைந்து முதல் இடத்தில் இருக்கிறார்.

கடந்த 1996 -ம் ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த அனில் கும்ளே முதல் இடம் பிடித்தார். அதன் பிறகு ஜடேஜா இந்த சாதனை படைத்து உள்ளார். 

ஒட்டு மொத்தத்தில் முதல் இடம் பிடித் த இந்திய வீரர்களில் ஜடேஜா 4-வது வீரராக திகழ்கிறார். கபில்தேவ் மற்றும் மனீந்தர் சிங் ஆகிய இருவரும் மற்ற இந்திய வீரர்களாவர். 

சமீபத்தில் முடிந்த ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் தொடரில் ஜடேஜா 5 ஆட்டத்தில் பங்கேற்று 5 விக்கெட் எடுத்தார். 

இந்த ஆண்டு அவர் 22 ஆட்டத்தில் ஆடி 38 விக்கெட் வீழ்த்தி அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்களில் முதலிடத்தில் இரு க்கிறார். இதன் சராசரி 18.86 ஆகும். 

சாம்பியன்ஸ் கோப்பை போட்டியிலு ம் ஜடேஜா 5 ஆட்டத்தில் ஆடி 12 விக்கெட் வீழ்த்தி அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்களில் முதலிடம் பெற்றார். 

இங்கிலாந்திற்கு எதிரான இறுதி ஆட்ட த்தில் அவர் ஆட்டநாயகன் விருது பெ ற்றார். மற்றொரு இந்திய வீரரான அமித் மிஸ்ரா 47 இடம் முன்னேறி 32 -வது இடம் பெற்று இருக்கிறார். 

ஜிம்பாப்வே மற்றும் இந்திய அணிகளு க்கு இடையே நடந்த ஒரு நாள் தொட ரில் மிஸ்ரா மொத்தம் 18 விக்கெட் வீழ் த்தி இருந்தார். 

பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் தெ.ஆ. வீரர்கள் ஹசிம் அம்லா முதலி டத்திலும், டிவில்லியர் 2-வது இடத்தி லும் உள்ளனர். 

இலங்கை வீரர் சங்கக்கரா 3-வது இடத் திலும் உள்ளனர். அவர் 3-வது இடம் பிடித்து இருப்பதன் மூலம் தனது முந் தைய சாதனையை சமன் செய்து இருக் கிறார். 

தெ.ஆ.வுக்கு எதிரான ஒரு நாள் தொ டரில் சங்கக்கரா 372 ரன் எடுத்து இருந் தார். இதன் சராசரி 93 ஆகும். கடந்த 2005 - ம் ஆண்டு அவர் 3-வது இடம் பெற்று இருந்தார். 

மற்றொரு இலங்கை வீரரான தில்ஷா ன் 2 இடம் முன்னேறி 6-வது இடம் பெ ற்று இருக்கிறார். அவர் இந்தத் தொடரி ல் 272 ரன் எடுத்தார். அதிக ரன் எடுத்த வீரர்களில் 2-வது இடம் பெற்றார். 

அணிகளுக்கான தரவரிசையில் இந்தி யா தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. ஜிம்பாப்வேக்கு எதிரான தொட ரை 5 -0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணிக்கு 1 தரப்புள்ளியே கிடைத் தது. 

ஆஸ்திரேலிய அணி 2 -வது இடத்தில் உள்ளது. அந்த அணி இந்தியாவை விட 9 தரப்புள்ளிகள் பின்தங்கி உள்ளது. 

இலங்கை அணி 4-வது இடத்திலும், தெ ன் ஆப்பிரிக்கா அணி 5-வது இடத்திலு ம் உள்ளன. தெ.ஆ. அணியை விட இல ங்கை 9 புள்ளிகள் கூடுதலாக பெற்று உள்ளது. 

சமீபத்தில் முடிந்த ஒரு நாள் தொடரில் இந்திய அணி 5 -0 என்ற கணக்கில் ஜிம் பாப்வேயை தோற்கடித்தது. இலங்கை அணி 4 -1 என்ற கணக்கில் தெ.ஆ.வை வீழ்த்தியது. இதற்குப் பிறகு மேற்படி பட்டியல் வெளியாகியுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்