முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.கோப்பை ஜூ.ஹாக்கி: இந்திய மகளிரணிக்கு வெண்கலம்

திங்கட்கிழமை, 5 ஆகஸ்ட் 2013      விளையாட்டு
Image Unavailable

 

மான்சென்கிளாக்பேக், ஆக. 6 -  உலகக் கோப்பை ஜூனியர் மகளிர் ஹாக்கிப் போட்டியில் இந்திய மகளி ரணி வெண்கலம் வென்று சரித்திர சாத னை படைத்துள்ளது. ஞாயிற்றுக் கிழமை நடந்த இந்தப் போட்டியில் இந்திய அணி 3- 2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி முதல் முறையாக உலகக் கோப்பை யில் பதக்கம் வென்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி தரப் பில் இளம் வீராங்கனையான ராணி அபாரமாக ஆடி கோல் அடித்து அணிக்கு பெருமை தேடித் தந்தார். 

18 வயதான ராணி முன்னதாக ரெகுலர் நேரத்தில் ஒரு கோல் அடித்து இருந்தா ர். பின்பு அளிக்கப்பட்ட பெனால்டி       ஷூட் அவுட்டில் 2 கோல் அடித்து இந் திய அணிக்கு மறக்க முடியாத வெற்றி யை அளித்தார். 

மற்றொரு இந்திய வீராங்கனையான நவ்னீத் கவுர் பெனால்டி ஷூட்டில் மே லும் ஒரு கோல் அடித்ததால் இந்திய அணி 3 -2 என்ற கணக்கில் வென்றது. 

இங்கிலாந்து அணி சார்பில் அன்னா டோமன் பெனால்டியில் கோல் வாய்ப்பை நழுவிட்டார். முன்னதாக ரெகு லர் நேரத்தில் இரு அணிகளும் 1 - 1 என்ற கோல் கணக்கில் சமனாக இருந்தன. 

முன்னதாக நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி சிறப்பாக ஆடி முன்னணி அணிகளை தோற்கடித்து இறுதிக் கட்ட த்திற்கு முன்னேறியது. இறுதியில் நன்றாக ஆடி பதக்கத்துடன் முடித்து இருக் கிறது. 

3-வது இடத்திற்கான போட்டியில் இங் கிலாந்து வீராங்கனைகளும் கடும் போராட்டத்தை வெளிப்படுத்தினர். ஆனால் அவர்களால் 4-வது இடத்தை யே பிடிக்க முடிந்தது. 

கடந்த 2009 -ம் ஆண்டு பாஸ்டனில் உலகக் கோப்பை போட்டி நடந்தது. இதில் 3 -வது இடத்திற்கான ஆட்டத்தி ல் இங்கிலாந்து அணி தென் கொரியா விடம் வெண்கலத்தை பறிகொடுத்தது. 

பெனால்டி ஷூட்டில் முதல் வாய்ப் பை ராணி பயன்படுத்தி நேராக கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். 

இங்கிலாந்து அணி சார்பில் எமிலி டெ ப்ராண்ட் ஒருவர் மட்டுமே பெனால்டி ஷூட்டில் கோல் அடித்தார். மற்ற வீராங்கனைகள் தோல்வி கண்டனர். 

நவ்னீத் முதல் வாய்ப்பை நழுவவிட்டார். பின்பு 2-வது வாய்ப்பில் இங்கி. கோல் கீப்பரை ஏமாற்றி கோல் அடித் தார். இதனால் இந்தியாவின் கை ஓங்கி யது. 

முன்னதாக ரெகுலர் நேரத்தில் இங்கி லாந்து வீராங்கனை அன்னா கோல் அடித்தார். ஆனால் நெருக்கடியான கட்டத்தில், பெனால்டி ஷூட்டில் அவரா ல் கோல் அடிக்க முடியவில்லை. 

போட்டி துவங்கிய சிறிது நேரத்திலே யே இங்கிலாந்திற்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இதனை பயன் படுத்தி கிரேஸ் பால்ஸ்டன் கோல் அடி க்க முயன்றார். ஆனால் இந்திய கோல் கீப்பர் சானு சனாரிக் அதனை முறியடி த்தார். 

இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு முதல் கோல் வாய்ப்பு கிடை த்த போதிலும், முதல் கோலை இந்தி யாவே அடித்தது. 

ஆட்டம் துவங்கிய 13-வது நிமிடத்தில் இந்திய வீராங்கனை ராணி மின்னல் வேகத்தில் ஒரு கோல் அடித்து அணிக் கு முன்னிலை பெற்றுத் தந்தார். 

அடுத்த சில நிமிடத்தில் இந்தியாவுக்கு மேலும் ஒரு கோல் வாய்ப்பு பெ னால் டி கார்னர் மூலம் கிடைத்தது. ஆனால் இந்திய வீராங்கனைகள் இந்த வாய்ப் பை நழுவவிட்டனர். 

இந்திய வீராங்கனைகளால் பலமான இங்கிலாந்து தற்காப்பு அரணை முறிய டிக்க முடியவில்லை. இதனால் முதல் பாதியில் 1- 0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது. 

பின்பு 2 - வது பாதி ஆட்டம் துவங்கிய தும் இங்கிலாந்து வீராங்கனைகள் ஆவேசமாக தாக்குதல் நடத்தினர்.

இதற்கு விரைவில் பலன் கிடைத்தது. 55 - வது நிமிடத்தில் அன்னா டோமன் ஒரு கோலை அடித்தார். இதனால் ஆட்டம் 1- 1 என்ற கணக்கில் சமனானது. 

பின்பு இரு அணிகளும் மாறி மாறி தாக் குதல் நடத்திய போதிலும் எந்த அணியாலும் அடுத்த கோலை போட முடிய வில்லை. 

பெனால்டி ஷூட்டில் மொத்தம் 14 வாய்ப்புகள் அளிக்கப்பட்டன. இதில் 5 கோல் மட்டுமே அடிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்