முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை இன்னும் 6 மாதங்களில் சரியும்

திங்கட்கிழமை, 5 ஆகஸ்ட் 2013      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்,ஆக.6 - தற்போது தங்கதின் விலையும் ஏனைய சொத்து விலை மதிப்பினை போல் சென்றுகொண்டிருக்கிறது என அமெரிக்க டிபெடரல் ரிசெர்வ் தரவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நீங்கள் மலிவான விலையில் தங்கம் வாங்க விரும்பினால், ஆறு மாதங்கள் பொறுத்திருங்கள். இன்னும் 6 மாதங்களில் தங்கம் மிகவும் மலிவான விலையில் கிடைக்க வாய்ப்பு உண்டு. (ஊாநஉம பழடன சயவநள ாநசந:) தங்கத்தின் இருப்பு அளவை குறைக்கும் திட்டம் பற்றி எழுந்த ஒரு வாதத்தின் அடிப்படையில், தி யுஎஸ் டிபெடரல் இந்த வருட இறுதிக்குள் அதை செயல்படுத்தும் நோக்கில் இருப்பது, தங்கத்தின் விலை குறைய வாய்ப்பு உள்ளது என்பதற்கு ஒரு எளிய மற்றும் முக்கியமான காரணமாகும். சொத்து இருப்பு அளவை குறைப்பதற்காக சொத்து கொள்முதல் திட்டத்தில், தி டிபெடரல் ரிசர்வ் அடிக்கடி ்டுபட்டு வருகிறது. அதன்படி, சொத்து கொள்முதல் திட்டம் மூலம் லிக்விடிட்டி முறையை டிபெடரல் ரிசர்வ் அதிகரித்து வருகிறது. இந்த லிக்விடிட்டி முறை பணபங்கு மற்றும் தங்கம் போன்றவற்றிலும் காணப்படுகிறது. மேலும் தி டிபெடரல் ரிசர்வ் அதன் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த திட்டமிடுகிறது. இதன் மூலம் தங்கம் ஒரு கடுமையான விற்பனை அழுத்தத்திற்கு தள்ளப்படும் வாய்ப்பு உள்ளது. இந்த திட்டம் ஊக்கப்படுத்தபட்டு, முழுமையான முறையில் செயல்பாட்டிற்கு வருவதற்கு முன்னர், வேலைவாய்ப்பு விகிதம் அதிகரிக்கப்பட வேண்டும் என தி டிபெடரல் ரிசர்வ் விரும்புகிறது. அமெரிக்காவில் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு விகிதம் மேம்படுவதற்கான அறிகுறிகள் உள்ளன. அமெரிக்காவில் இருந்து வெளிவந்த உற்பத்தி தரவும் இதை ஊக்குவிப்பதாக இருந்தது. ஆகவே, தி டிபெடரல் ரிசர்வ் அதன் திட்டதை டிசம்பரில் அமல்படுதவுள்ளதால், தங்கம் மலிவு விலையில் கிடைக்க வாய்ப்பு உள்ளது. எனினும், இந்தியர்கள் தங்கம் வாங்குவதில் ரூபாயின் பங்களிப்பும் முக்கியமானது. சர்வதேச தங்க விலை வீழ்ச்சியடையும் பட்சத்தில் இந்திய ரூபாயின் மதிப்பும் வீழ்ச்சியடைந்தால், தங்கத்தை மலிவாக வாங்குவதற்கு நமக்கு சாத்தியமில்லை. எனவே சர்வதேச தங்க விலை குறைய வேண்டும் என்றும், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிக்க வேண்டும் என்றும் தங்கம் வாங்க விரும்பும் இந்தியர்கள் கடவுளை மனறாட வேண்டும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்