முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீரர்கள் மீது தாக்குதல்: பாக். தூதரை அழைத்து கண்டனம்

செவ்வாய்க்கிழமை, 6 ஆகஸ்ட் 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,ஆக.7 - ஜம்மு-காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினரும் தீவிரவாதிகளும் சேர்ந்து தாக்குதல் நடத்தியதில் இந்திய ராணுவ வீரர்கள் 5 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்திற்கு புதுடெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரை அழைத்து இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. 

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தையொட்டி பாகிஸ்தான் எல்லை அருகே அமைக்கப்பட்டிருந்த இந்திய ராணுவ முகாமை நோக்கி பாகிஸ்தான் ராணுவத்தினரும் தீவிரவாதிகளும் மொத்தமாக பயங்கர ஆயுதங்களுடன் வந்து இந்திய முகாம்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் இந்திய ராணுவ வீரர்கள் 5 பேர் பலியாகிவிட்டனர். தீவிரவாதிகள் பாகிஸ்தான் ராணுவத்தினரின் உடையை அணிந்துவந்து தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும் இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் சேர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர். 

இந்தநிலையில் புதுடெல்லியில் உள்ள பாகிஸ்தான் துணை ஹைகமிஷனரை அழைத்து இந்தியா சார்பாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்திய வீரர்கள் மீது தாக்கியது துரதிர்ஷ்டவசமானது என்றும் தெரிவிக்கப்பட்டது. பாகிஸ்தான் ராணுவத்தினர் கடந்த பல மாதங்களுக்கு முன்பு இந்திய ராணுவத்தினர் 2 பேர்களை சுட்டுக்கொன்றதோடு அதில் ஒரு வீரரின் தலையை துண்டித்துக்கொண்டு சென்றுவிட்டனர். இதற்கு இந்தியா கடும் நடவடிக்கை எடுத்தது. அதன் பின்னர் தற்போது பாகிஸ்தான் ராணுவத்தினரும் தீவிரவாதிகளும் சேர்ந்து கடும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதனையொட்டி ஜம்மு-காஷ்மீர் பகுதியில் நிலவும் சூழ்நிலை குறித்து இந்திய ராணுவ தலைமை தளபதி பிக்ராம் சிங் ஆய்வு செய்து வருகிறார் என்று தகலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பிரதமர் மன்மோகன் சிங்கும் நவாஷ் ஷெரீப்பும் இந்த மாத இறுதியில் நியூயார்க்கில் சந்தித்து பேச உள்ள நிலையில் பாகிஸ்தான் ராணுவத்தினரும் தீவிரவாதிகளும் படுகேவலமாக நடந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்