முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேட்ரிட் ஓபன் - சானியா-எலீனா காலிறுதிச் சுற்றுக்கு முன்னேற்றம்

சனிக்கிழமை, 7 மே 2011      விளையாட்டு
Image Unavailable

 

மேட்ரிட், மே. 7- மேட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் சானியா மிர்சா மற்றும் எலீனா வெஸ்சினா ஜோடி வெற்றி பெற்று காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. 

மகளிருக்கான டபிள்யு. டி. ஏ. எனப்படும் சுற்றுப் பயணப் போட்டி 

களில் ஒன்றான மேட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி மேட்ரிட் நகரில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற முன்னணி வீராங்கனைகள் களத்தில் குதித்தனர்.  இந்தப் போட்டியில் அவர்கள் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை குதூகலப் படுத்தினர். 

இந்தப் போட்டியின் மொத்த பரிசுத் தொகை 3,500, 000 யூரோக்களைக் கொண்டதாகும். இந்தப் போட்டி டயர் - 2 வகையிலானதாகும். 

மேட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை அடைந்து உள்ளது. 

இதில் இரட்டையர் பிரிவின் 2 - வது சுற்று ஆட்டம் ஒன்று நடந்தது. இதில், சானியா மிர்சா மற்றும் எலீனா வெஸ்னியா ஜோடியும், நாடி ா பெட்ரோவா மற்றும் அனஸ்டாசியா ரோடினோவா இணையும் மோதின. 

2 செட் கொண்ட  இந்த ஆட்டத்தில் சானியா மற்றும் எலீனா ஜோடி 

அபாரமாக ஆடி, 6 - 3, 7 - 5 என்ற செட் கணக்கில், ரஷ்ய மற்றும் ஆஸ் ரேலிய இணையை வீழ்த்தி அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது. 

முன்னதாக நடந்த முதல் செட்டில் சானியா ஜோடிக்கு 3 பிரேக் வாய்ப்புகள் கிடைத்தன. இந்த 3 வாய்ப்பையும் அந்த ஜோடி தங்களுக்கு சாதகமாக பாயிண்ட்டுகளாக மாற்றியது. 

அதே போல பின்பு நடந்த இரண்டாவது செட்டிலும், அந்த ஜோடிக்கு 4 வாய்ப்புகள் கிடைத்தன. முதல் செட்டைப் போலவே இந்த செட்டிலும் 2 வாய்ப்பை தங்களுக்கு சாதகமாக மாற்றி வெற்றி பெற்றது. இந்தப் போட்டி சுமார் 1 மணி மற்றும் 27 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. 

அடுத்து நடக்கும் காலிறுதிச் சுற்றில் சானியா மற்றும் எலீனா வெஸ் னியா ஜோடி குவெட்டா பெஸ்கே (செக்.குடியரசு) மற்றும் காத்தரி

னா செர்போட்னிக் (சுலோவேனியா) இணையை சந்திக்க இருக்கிறது.

செக். குடியரசு மற்றும் சுலோரேனியாவைச் சேர்ந்த இணை இந்தப் போட்டியில் 2 -ம் நிலை ஜோடியாகும் . எனவே சானியா ஜோடிக்கு காலிறுதிச் சுற்று கடும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்