முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீனவர்ககள் கொலை: இத்தாலி சாட்சிகள் ஒத்துழைக்க மறுப்பு

புதன்கிழமை, 7 ஆகஸ்ட் 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஆக.7 - கேரள கடல் பகுதியில் கடந்த ஆண்டு விசைப்படகில் மீன் பிடித்துக்கொண்டிருந்த கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் மீது அந்த வழியாக வந்த இத்தாலி நாட்டு சரக்கு கப்பல் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கியால் சுட்டனர். இதில் இருவர் இறந்தனர்.

இதுதொடர்பாக இத்தாலி கடற்படையைச் சேர்ந்த  மாசிமிலோனா, சல்வதோர் ஆகிய இருவரையும் கேரள போலீஸார் கைது செய்தனர். நடுக்கடலில் நடைபெற்ற இந்த சம்பவத்தை விசாரிக்க இந்தியாவுக்கு அதிகாரம் இல்லை என்று இத்தாலி வீரர்கள் சார்பாக அந்த நாட்டு தூதரகம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தது.

இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து கேரள கடற்கரைக்கு அப்பால் நடைபெற்ற கொலை சம்பவத்தை விசாரிக்க கேரள போலீஸாருக்கு அதிகாரமில்லை. ஆனால் இதை விசாரிக்க இந்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று கூறி வழக்கை புதுடெல்லி சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டது.  இந்த வழக்கை சிறப்புப் புலனாய்வு அமைப்பு விசாரிக்க உத்தரவிட்டது. 

இந்த வழக்கில் கப்பல் மாலுமிகள் பலர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு பலமுறை சம்மன் அனுப்பப்பட்டது. இதுவரை 3 பேர் மட்டுமே தங்கள் வாக்குமூலத்தை பதிவு செய்தனர். மற்றவர்கள் விசாரணைக்கு வரவில்லை. சாட்சிகள் வாக்குமூலம் தொடர்பாக வெளியுறவு அமைச்சகம் மூலமாக இத்தாலி அரசுக்குக் கோரிக்கை வைக்கப்படும் என்று உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

சாட்சிகள் விசாரணைக்கு வராததால் குற்றப்பத்திரிகை தாக்கல் போன்ற அடுத்த கட்ட நடவடிக்கைக்கு இந்த வழக்கு எடுத்துச் செல்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்