முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அண்ணா தொழில் நுட்ப பல்கலை. ஆண்டுவிழா

சனிக்கிழமை, 7 மே 2011      தமிழகம்
Image Unavailable

மதுரை,மே.7 - மதுரை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆண்டு விழா நேற்று நடந்தது. மதுரை அண்ணா தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு விழா நேற்று மதுரையில் நடந்தது. பல்கலைக்கழக துணைவேந்தர் அர.முருகேசன் தலைமை வகித்தார். தமிழ்நாடு தொழில் நுட்ப கல்வி அமைப்பின் உபதலைவர் எம்.எஸ்.பழனிச்சாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கல்வி மற்றும் திட்டமிடல் இயக்குனர் முனைவர் ஹேமச்சந்திர ரெட்டி மாணவர்களின் வளர்ச்சியில் தொழில்நுட்பக்கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். பல்கலைக்கழக பதிவாளர் ஈ.ப.பெருமாள்பிள்ளை வாழ்த்துரை வழங்கினார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர்கள் ஆர்.சுப்பிரமணியபிள்ளை, வி.ஜோசப் பால்ராஜ், எம்.எஸ்.பழனிச்சாமி, கே.ஹேமச்சந்திரரெட்டி ஆகியோர் பரிசுகளை வழங்கினர். முடிவில் மாணவர் தொடர்பு இயக்குனர் சி.சொர்ணலதா நன்றி கூறினார். விழாவுக்கான ஏற்பாடுகளை பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்