முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெனாசீர் பூட்டோ கொலை வழக்கு விசாரணை தள்ளிவைப்பு

புதன்கிழமை, 7 ஆகஸ்ட் 2013      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத்,ஆக.7 - பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோ கொலை வழக்கு விசாரணைக்கு பாதுகாப்பு காரணம் கருதி தீவிரவாத தடுப்பு கோர்ட்டில் அந்நாட்டின் முன்னாள் ராணுவ ஆட்சியாளரான பெர்வெஷ் முஷாரப் ஆஜராக தவறியதை அடுத்து இந்த வழக்கு விசாரணையை வரும் 20-ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார். 

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோ கடந்த 2007-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ராவல்பிண்டியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் மர்ம ஆசாமிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பெர்வெஷ் முஷாரப் மீது கிரிமினல் சதித்திட்டம் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. இந்த வழக்கு ராவல்பிண்டி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் முஷாரப் ஆஜராக வேண்டும் என்று அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதேநேரம் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து பாதுகாப்பு காரணம் கருதி முஷாரப் நேற்று தீவிரவாத தடுப்புக்கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதுகுறித்து நீதிபதி செளத்ரியிடம் போலீசார் கூறுகையில் முஷாரப் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவரை கோர்ட்டுக்கு அழைத்து வருவது பாதுகாப்பாக இருக்காது என்று தெரிவித்தனர். இதை நீதிபதி ஏற்றுக்கொண்டு வழக்கு விசாரணையை வரும் 20-ம் தேதிக்கு ஒத்திவைத்ததுடன் அன்றைய தினம் முஷாரப் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று கண்டிப்புடன் உத்தரவிட வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த வழக்கில் முஷாரப் தண்டிக்கப்பட்டால் 69 வயதாகும் அவருக்கு மரணதண்டனையோ அல்லது ஆயுள் தண்டனையோ விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago