முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கராச்சியில் குண்டு வெடித்ததில் 7 சிறுவர்கள் பலி

புதன்கிழமை, 7 ஆகஸ்ட் 2013      உலகம்
Image Unavailable

 

கராச்சி, ஆக.8 - பாகிஸ்தானில் உள்ள கராச்சியில், விளையாட்டு மைதானம் அருகே குண்டு வெடித்ததில் 7 சிறுவர்கள் உயிரிழந்தனர். 26 பேர் பலத்தக் காயமடைந்தனர். கால்பந்து விளையாட்டு நடந்தபோது இந்த விபரீத சம்பவம் நடந்துள்ளது என்று போலீஸார் தெரிவித்தனர்.

விளையாட்டு மைதானத்துக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் பைக்கில் வைத்திருந்த குண்டு வெடித்ததில் இவர்கள் 7 பேரும் இறந்தனர். இவர்கள் பெரும்பாலானவர்கள் 10 வயதுக்குள்பட்ட சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது என்று தாரிக் தரோஜ் என்ற போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

  இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 11 பேர் இறந்ததாக பாகிஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த சானியா நாஸ் என்பவர் தெரிவித்தார். இவர்கள் அனைவரும் 10 வயது முதல் 15 வயதுவரை உள்ள சிறுவர்கள் என்றும் அவர் தெரிவித்தார். 

கராச்சி நகரில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இனம் மற்றும் அரசியல் பிரச்சனைகள் காரணமாக இங்கு கொலை, கடத்தல் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த பகுதியில் கால்பந்து விளையாட்டு மிகவும் பிரபலம். இங்கு வயது வித்தியாசமில்லாமல் அனைவரும் கால்பந்து விளையாட்டு விளையாடுவார்கள். இந்த நேரத்தில் இளம் பிஞ்சுகள் அநியாயமாக குண்டு வெடிப்புக்கு பலியாகி உள்ளது வேதனையளிப்பதாக உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்