முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க முன்னாள் அதிபர் புஷ்சுக்கு இருதய ஆபரேஷன்

புதன்கிழமை, 7 ஆகஸ்ட் 2013      உலகம்
Image Unavailable

 

டல்லஸ், ஆக. 8 - அமெரிக்காவின் முன்னாள் அதிபரான ஜார்ஜ் புஷ்க்கு வெற்றிகரமாக இருதய ஆபரேஷன் செய்யப் பட்டது. சிகிச்சை முடிந்து அவர் வீடு திரும்புவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2001 முதல் 2009ம் ஆண்டு வரை அமெரிக்காவின் அதிபராக பதவி வகித்தவர், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஜார்ஜ் டபிள்யூ புஷ். அதிபர் பதவியில் இருந்து ஒதுங்கிய பின்னர் பொது வாழ்க்கையோடு ஒதுக்கி, டல்லஸ் நகரில் தனது மனைவியுடன் வாழ்ந்து வருகிறார் 67 வயதாகும் புஷ். நேற்று முன் தினம் வழக்கமான உடல் பரிசோதனைக்காக மருத்துவமனைக்குச் சென்ற புஷ்ஷை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு இதயத்திற்கு செல்லும் இரத்தக் குழாயில் அடைப்பு இருப்பதாகவும், அதை உடனடியாக ஆபரேஷன் மூலம் சரி செய்து விடலாம் என தெரிவித்தனர்.

அதனை அடுத்து, அவருக்கு இதய ஆபரேஷன் நடை பெற்றது. தற்போது அவர் பூரண ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், இன்று வீடு திரும்ப இருப்பதாகவும் அவரது தகவல் அதிகாரி அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்