முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சூதாட்டம் குற்றம் என்பதை கற்றுத்தர வேண்டும்: டிராவிட்

வியாழக்கிழமை, 8 ஆகஸ்ட் 2013      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி, ஆக. 8 - கிரிக்கெட் சூதாட்டம் கிரிமினல் குற்ற ம் என்பதை இளம் வீரர்களுக்கு கற்றுத் தர வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டனான ராகுல் டிராவி ட் யோசனை தெரிவித்து இருக்கிறார். மேலும், மேற்படி குற்றங்கள் ஏற்படுவ தை தடுக்க கடும் சட்டம் இயற்றுவது அவசியம் என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார். 

இ.எஸ்.பி.என். கிரிக்கின்போ இணைய தளத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில் ராகுல் டிராவிட் மேற்கண்டவாறு தெ ரிவித்து இருக்கிறார்.  

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடை பெற்ற ஐ.பி.எல். போட்டியின் போது, ஸ்பாட் பிக்சிங் நடைபெற்றதாக குற்ற ச் சாட்டு எழுந்தது. 

இது தொடர்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த ஸ்ரீசாந்த் உள்பட 3 வீரர்களை அவர்கள் கைது செய்து அவர் களிடம் விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பாக சில புரோக்கர்களிட மும் விசாரணை நடந்தது. 

இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகியான குருநாத் மெய்யப்பன் மற்றும் ராஜஸ் தான் ராயல்ஸ் அணி நிர்வாகி குந்த்ரா ஆகியோர் இதில் சிக்கினர். மெய்யப்ப ன் பி.சி.சி.ஐ. தலைவர் ஸ்ரீநிவாசனின் மருமகனாவார். 

இதனைத் தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டு இருவரிடமும் விசார ணை நடந்தது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதனால் பி.சி.சி.ஐ. தலைவருக்கு பெ ரும் நெருக்கடி ஏற்பட்டது. அவர் தனது பதவியில் இருந்து தற்காலிகமாக வில கினார். அவருக்குப் பதிலாக ஜெக்          மோகன் டால்மியா இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டார்.  

இதனைத் தொடர்ந்து பெங்களூர் வீர ரான ராகுல் டிராவிட் மேற்கண்டவாறு கூறியிருக்கிறார். அவர் இது தொடர் பாக மேலும் தெரிவித்ததாவது - கிரிக்கெட் சூதாட்டம் ஒரு கிரிமினல் குற்றம் என்பதை இளம் வீரர்களுக்கு ஆரம்ப கட்டத்திலேயே கற்றுத் தரவே ண்டும், கலந்துரையாடலும் நடத்த வே ண்டும். 

இந்த பாடத்தை விரைவில் துவக்க வே ண்டும். இளம் வீரர்களுக்கு கற்றுத் தர வேண்டும். ரஞ்சிப் போட்டியில் இதுதொடர்பாக இளம் வீரர்களுக்கு பாடம் நடத்தப்படுகிறது. 

இளம் வீரர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் இது போன்ற குற்றங்களை தடுக்க கடும் சட்டம் இயற்ற வேண்டும். அப்போது தான் குற்றவா ளிகள் மத்தியில் அச்சம் ஏற்படும். 

உதாரணமாக சர்வதேச அளவில் சைக் கிள் வீரர்கள் ஊக்க மருந்து உட்கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது தவறானது என்பதை அனைவரும் அறிவர். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்