முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீரர்கள் இறந்ததால் பதற்றம்: இந்தியா-பாக், அதிகாரிகள் பேச்சு

வியாழக்கிழமை, 8 ஆகஸ்ட் 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஆக.8 - இந்திய எல்லையில் 5 ராணுவ வீரர்கள் இறந்ததால் ஏற்பட்ட பதற்றத்தை அடுத்து இந்தியா-பாகிஸ்தான் அதிகாரிகள் ஹாட்லைனில் பேசினர். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தாக்கியதில் இந்திய வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர். ஒருவர் பலத்தக் காயமடைந்தார். இதையடுத்து இந்தியா- பாகிஸ்தான் அதிகாரிகள் ஹாட் லைனில் பேசினர்.      

எல்லையில் 5 பேர் இறந்துள்ள நிலையில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக இந்திய- பாகிஸ்தான் உயர் அதிகாரிகள் அளவில் ஹாட் லைனில் பேச்சு நடைபெற்றது. இரு தரப்பு அதிகாரிகளும் தற்போதைய சூழ்நிலை பற்றி விரிவாகப் பேசினர். பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் போர் உடன்படிக்கையை மீறி எல்லைக் கோடு  பகுதியில் வன்முறையில் ஈடுபட்டது என்றும் இதனால் இந்திய வீரர்கள் 5 பேர் இறந்தனர் என்றும் இந்திய அதிகாரி, பாகிஸ்தான் உயர் அதிகாரியிடம் குற்றம் சாட்டினார்.

ஆனால் பாகிஸ்தான் உயர் அதிகாரி இதை மறுத்தார். அவர் கூறுகையில், பாண்டு பகுதியில் இந்திய ராணுவம் வரம்பு மீறி சுட்டதில் பாகிஸ்தான் வீரர்கள் இருவர் காயமடைந்தனர் என்று தெரிவித்தார். ஹாட்லைனில் அவர் பேசும்போது இதை தெரிவித்தார். 

2003-ம் ஆண்டு ஏற்பட்ட உடன்படிக்கைப்படி கையெழுத்து இடப்பட்டது. ஆனால் பாகிஸ்தானின் அத்துமீறல் ஜனவரி, பிப்ரவரி, ஜூலை ஆகிய மாதங்களில் தொடர்ந்து வருகிறது. ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபும் அடுத்த மாதம் நியூயார்க் நகரில் சந்தித்துப் பேச  உள்ளனர். இந்தியா- பாகிஸ்தான் இடையே பேச்சு வார்த்தை நடக்க உள்ள  நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago