முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெண்கலம் வென்ற வீராங்கனைகளுக்கு தலா ரூ.50 ஆயிரம்

வியாழக்கிழமை, 8 ஆகஸ்ட் 2013      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி, ஆக.9 - ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய ஹாக்கி அணியில் இடம்பெற்றிருந்த வீராங்கனைகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று மத்திய விளையாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. அணியின் பயிற்சியாளர்களுக்கு தலா ரூ. 25 ஆயிரம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சுசீலா சானு தலைமையிலான 18 பேர் கொண்ட இந்திய அணியினர் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ஜிதேந்திரசிங்கை அவருடைய அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். அப்போது உலகக் கோப்பைப் போட்டியில் கிடைத்த அனுபவங்களை அமைச்சருடன் பகிர்ந்துகொண்ட  வீராங்கனைகள் அந்தப்போட்டிக்காக அனைத்து வசதிகளையும் கொடுத்ததற்காக அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.

அப்போது அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்த ஜிதேந்திரசிங் வெண்கலம் வென்றதன் மூலம்இந்திய ஹாக்கி வீராங்கனைகள் நாட்டுக்குப் பெருமை சேர்த்ததாகக் குறிப்பிட்டார். மேலும் அமைச்சரின் அலுவலகத்தில் கேக் வெட்டி இந்திய வீராங்கனைகள் வெற்றியைக் கொண்டாடினார்கள். வெண்கலம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த வீராங்கனைகளின் கையெழுத்திட்ட  டி.சர்ட் மற்றும் ஹாக்கி மட்டையை அணியின் சார்பில் அதன் கேப்டன் சுசீலா சானு அமைச்ருக்குப் பரிசளித்தார்.     

  ஜெர்மனியின் மான்செங்லாட் நகரில் நடைபெற்ற ஜினியர் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி  3-2 என்ற கோல்கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி வெண்கலம் வென்றது. ஜூனியர் உலகக்கோப்பை வரலாற்றில் இந்திய அணி முதல் முறையாகப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்