முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்தரகாண்ட் நிவாரண பணிகளுக்கு உலக வங்கி உதவி

வியாழக்கிழமை, 8 ஆகஸ்ட் 2013      இந்தியா
Image Unavailable

 

டேராடூன், ஆக.9 - மழை, வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட உத்தரகாண்ட்  மாநில நிவாரணப் பணிகளுக்கு ஆசியா, உலக வங்கி ஆகியவை ரூ. 2,400 கோடி உதவி வழங்க முன் வந்துள்ளன. இந்த மாநிலத்தில் ஏற்பட்ட மழை, வெள்ளம், நிலச்சரிவு காரணமாக பெரும் சேதம் ஏற்பட்டது. சுமார் 6 ஆயிரம் பேரும், 12 ஆயிரம் கால்நடைகள் இறந்துள்ளனர். பல ஆயிரம் கோடி மதிப்பில் சேதம் ஏற்பட்டது. இந்த மாநிலத்தை சீரமைக்க ரூ. 10 ஆயிரம் கோடி தேவை என்று மத்திய அரசிடம் மாநில அரசு கேட்டது. மத்திய அரசு இதுவரை ரூ.250 கோடி மட்டுமே கொடுத்துள்ளது.

இந்நிலையில் உத்தரகாண்ட் மாநில நிவாரணப் பணிகளுக்கு ரூ. 2400 கோடி நிதி உதவி தர ஆசிய வளர்ச்சி வங்கி, உலக வங்கி ஆகியவை முன் வந்துள்ளன. வெள்ளச்சேதப் பகுதிகளை இந்த வங்கிகளின் அதிகாரிகள் பார்வையிட்டனர். பின்னர் தலைமைச் செயலாளர் சுபாஷ் குமாருடன் அவர்கள் ஆலோசனை நடத்தினர். 

சுற்றலா தலங்கள் மேம்பாடு, சாலைகள் சீரமைப்பு, குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, அரசு கட்டிடங்கள் சீரமைப்பு ஆகியவற்றுக்கு இந்தத் தொகை பயன்படுத்தப்படும். கடன் தொகையில் 90 சதவீதத்துக்கு மத்திய அரசும், 10 சதவீதத்துக்கு மாநில அரசும் பொறுப்பேற்றுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்