முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூடுதல் கட்டணம் - முதலமைச்சர் எச்சரிக்கை

சனிக்கிழமை, 7 மே 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, மே.7 - மெட்ரிகுலேசன் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது, எனவே, நீதியரசர் ரவிராஜபாண்டியன் குழு புதிய கல்வி கட்டணங்களை அறிவிக்கும் வரை பள்ளி நிர்வாகங்கள் பொறுமை காக்க வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

முதல்​அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி​பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:​ கேள்வி:​ அருணாசலபிரதேச முதல்​மந்திரி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தது குறித்து....? 

கருணாநிதி பதில்:​ பழங்குடி இனத்தில் பிறந்து, பவுத்த மதத்தைத் தழுவியவரும், அருணாசலபிரதேச முதலமைச்சருமான டோர்ஜி காண்டும், அவருடன் 5 பேரும், ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்ததறிந்து, நெஞ்சம் பதைபதைக்கிறது. அவர்களது குடும்பத்தினருக்கும், அருணாசலபிரதேச மக்களுக்கும், தமிழக அரசின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

கேள்வி:​ ``என்டோசல்பான்'' எனும் nullச்சிக்கொல்லி மருந்து தடை செய்யப்பட வேண்டுமென் கோரிக்கை எழுந்துள்ளதே?

பதில்:​ கேரள மாநிலத்தில் காசர்கோடு உள்ளிட்ட பகுதிகளில், முந்திரித் தோட்டங்களில் nullச்சிகளை ஒழிப்பதற்காக என்டோசல்பான் மருந்து பயன்படுத்தப்பட்டதால், நூற்றுக்கணக்கானோர் பாதிப்புக்கு உள்ளாகி, மரணம் அடைந்தனர். எனவே, கேரள அரசு இந்த மருந்தை தடை செய்துள்ளது. அதனைத் தொடர்ந்து, இந்திய நாடு முழுதும் இந்தப் nullச்சிக்கொல்லி மருந்து தடை செய்யப்பட வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக, இந்திய உச்சnullநீதி மன்றத்திலும் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம், இந்தப் nullச்சிமருந்தின் பாதுகாப்பு தன்மை குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்துள்ளது. தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு ஒன்றை அமைத்து; என்டோசல்பான் nullச்சிக்கொல்லி மருந்துக்குத் தமிழகத்தில் தடை விதிப்பது குறித்து தகுந்த பரிந்துரைகளைப் பெற்று; முடிவெடுத்துச் செயல்படுத்தலாம் என்று திட்டமிடப்பட்டுள்ளது. 

கேள்வி:​ அயோடின் கலந்த உப்பைப் பயன்படுத்துவதன் அளவு உயர்ந்திருப்பதாகச் செய்தி வந்துள்ளதே? 

பதில்:​ இந்தியாவில், அதிலும் குறிப்பாக, ஊரகப் பகுதிகளில் அயோடின் கலந்த உப்பைப் பயன்படுத்துவது 20 சதவிகித அளவுக்கு உயர்ந்திருப்பதாக, 2010​ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது. அயோடின் கலந்த உப்பைப் பயன்படுத்துவது படிப்படியாகப் பரவி, அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேள்வி:​ சில மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் கூடுதலாகக் கல்விக் கட்டணம் வசூல் செய்வதாகவும்; கூடுதல் கட்டணத்தைச் செலுத்தாவிட்டால், பள்ளியை விட்டு மாணவர்களை வெளியேற்றுவதாகவும்; செய்தி வெளிவந்துள்ளதே?

பதில்:​ தமிழகத்தில் தனியார் நடத்திவரும் 12 ஆயிரம் பள்ளிகளில், மாணவர்களிடமிருந்து வசூலிக்க வேண்டிய கல்விக் கட்டணத்தை நியாயமான அடிப்படையில் முறைப்படுத்துவதற்காக, நீnullதியரசர் கோவிந்தராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. பள்ளிகளுக்கான கல்விக் கட்டணத்தை, அந்தக் குழு நிர்ணயம் செய்தது. அப்படி நிர்ணயம் செய்த கட்டணத்தை, 4 ஆயிரம் பள்ளிகள் ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்திட முன்வந்தன. மற்ற பள்ளிகளின் நிர்வாகிகள் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம், பள்ளிகளை நடத்துவதற்குக் கட்டுப்படியாகாது என்று முறையிட்டனர். 

அவர்களில் ஒரு சிலர், சென்னை உயர்nullநீதிமன்றத்தை அணுகினர். பள்ளி நிர்வாகிகளை விசாரித்து, பள்ளியினுடைய அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளைக் கருத்தில்கொண்டு, கட்டணத்தை நிர்ணயிக்குமாறு உயர்நீnullதிமன்றம் உத்தரவிட்டது. 

இதற்கிடையே, nullநீதியரசர் கோவிந்தராஜன், தனது பொறுப்பிலிருந்து விலகிவிடவே, nullநீதியரசர் ரவிராஜ பாண்டியன் தலைமையில் புதிய குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவும், சென்னை உயர்nullநீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில், தனது பணியை நிறைவேற்றி, முடிவுகள் எடுத்து, அறிவித்திடும் கட்டத்தில் உள்ளது. 

இந்த நிலையில், ஒருசில பள்ளிகள் அதிகக் கட்டணம் வசூலிப்பதாகவும், கட்டணத்தைச் செலுத்தாவிட்டால், மாணவர்களைப் பள்ளியிலிருந்து வெளியேற்றுவதாகவும் தகவல் வருகிறது. பள்ளிகளின் நிர்வாகிகள், இப்படிச் செய்வது சட்டப்படியானதோ, முறையானதோ, நியாயமானதோ அல்ல. இந்த மாதிரியான நிகழ்வுகள் தொடர்ந்தால், அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. 

பள்ளி நிர்வாகங்களுக்குக் கட்டுப்படியாகக் கூடியதும்; பெற்றோர்கள் தாங்கக் கூடியதுமான, புதிய கட்டணங்கள் அமையும் என்று ஏற்கனவே உணர்த்தப்பட்டுள்ளது. எனவே, நீnullதியரசர் ரவிராஜ பாண்டியன் குழு, புதிய கட்டணங்களை அறிவிக்கும்வரை, பள்ளி நிர்வாகங்கள் பொறுமையைக் கடைப்பிடித்திட வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்