முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீனவர்களை விடுவிக்க இலங்கைத் தூதரிடம் வலியுறுத்தல்

வியாழக்கிழமை, 8 ஆகஸ்ட் 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஆக. 9 - இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 90 பேர் உள்ளிட்ட இந்திய மீனவர்கள் 114 பேரை விடுவிப்பது தொடர்பாக, தூதரக ரீதியிலான கருத்தை இந்தியா பதிவு செய்தது. இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் பிரசாத் கரியவாசத்தை வரவழைத்து வங்கதேசம், இலங்கை, மியான்மர், மாலத்தீவுகள் (பிஎஸ்எம்) பிரிவுக்கான இணைச் செயலர் ஹர்ஷவர்த்தன் சிரிங்காலே இந்தக் கருத்தைப் பதிவு செய்ததாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. கொழும்பில் உள்ள இந்திய தூதரகமும் இலங்கை வெளியுறவு அமைச்சகத்திடம் இந்தப் பிரச்னையை எழுப்பியது.

தற்போது இந்திய மீனவர்கள் 114 பேர் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களது 21 மீன்பிடி படகுகளும் இலங்கை கட்டுப்பாட்டில் உள்ளன. அவர்களுடன் இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், மருத்துவ உதவிகள் தேவைப்படும்போது வழங்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை சிறைகளில் வாடும் தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கையுடன் தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதிய நிலையில், அந்த முயற்சியை இந்தியா தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. டெல்லிக்கு கடந்த மாதம் இலங்கை பொருளாதார மேம்பாட்டுத் துறை அமைச்சர் பசில் ராஜபக்சே வந்த போது, அவரிடம் இந்த பிரச்னை தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித்தும் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்