முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னாள் பொதுமேலாளர் வீட்டில் சி.பி.ஐ. திடீர் ரெய்டு

வியாழக்கிழமை, 8 ஆகஸ்ட் 2013      ஊழல்
Image Unavailable

 

சேலம் ஆக.9​- சேலத்தில் பி.எஸ்.என்.எல்.தமிழ்நாடு சர்க்கிள் முன்னாள் பொதுமேலாளர் வேலுச்சாமி வீட்டில் சி.பி.ஐ.அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர். இவர் பதவியில் இருந்த போது பல்வேறு ஊழல்கள் செய்துள்ளதாக புகார் வந்ததின் பேரில் இந்த சோதனை நடைப்பெற்றதாக கூறப்படுகிறது. மேலும் 2 ஜி ஊழல் வழக்கில் அவருக்கு தொடர்பு இருக்கலாமோ? என சந்தேகிக்கவும்படுகிறது.

சேலம் ரெட்டிப்பட்டி டாக்டர்ஸ் காலனியில் வசிப்பவர் வேலுச்சாமி(63). இவர் பி.எஸ்.என்.எல்.சேலம,கோவை, உள்ளிட்ட மண்டல பகுதிகளில் பொதுமேலாளராகவும் பின்னர் தமிழ்நாடு சர்க்கிள் பொதுமேலாளராகவும் பணியாற்றி கடந்த 2000 ம் ஆண்டில் ஓய்வு பெற்றார். இவர் தமிழ்நாடு சர்க்கிள் பொதுமேலாளராக இருந்த போது பி.எஸ்.என்.எல்லில் பல்வேறு புதிய திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டங்களில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக இவர் மீது சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன.

இந்த நிலையில் டெல்லியில் இருந்து சிபிஐ அதிகாரி வேலுச்சாமி தலைமையில் 8 பேர் கொண்ட குழுவினர் நேற்று காலை 8 மணிக்கு டாக்டர்ஸ் காலனியில் உள்ள வேலுச்சாமியின் வீட்டிற்கு வந்தனர். ஆனால் அவர் வீட்டில் இல்லை.குடும்பத்தினரோடு அமெரிக்காவில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றிருப்பதாக தகவல் தெரிவித்தனர்.இருப்பினும் அவரது வீட்டு சாவி கீழே உள்ள வீட்டில் இருந்ததால் அதை பெற்று அவர்கள் அவரது வீட்டினுள் சென்று சோதனை செய்தனர். வீட்டில் இருந்த முக்கிய அறைகளுக்கு செல்ல சாவி இல்லாததால் சிபிஐ அதிகாரிகள் அவரது வீட்டிற்கு சீல் வைத்தனர். அவர் வந்த பின்பு சோதனை நடைபெறும் என தெரிகிறது.

இது அவர் மீது வந்துள்ள ஊழல் புகாரின் பேரில் நடைப்பெற்ற சோதனையா? அல்லது 2ஜி வழக்கில் இவருக்கும் ஏதேனும் தொடர்பு இருந்து அதன் பேரில் நடைப்பெற்ற சோதனையா? என்பது தெரியவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago