முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சந்துருவுக்கு எதிரான ஆதாரங்கள் கிடைத்துள்ளன: சேரன்

வெள்ளிக்கிழமை, 9 ஆகஸ்ட் 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஆக. 10 - தனது மகளின் காதலர் சந்துருவுக்கு எதிரான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக திரைப்பட இயக்குநர் சேரன் தெரிவித்தார். இயக்குநர் சேரனின் இரண்டாவது மகள் தாமினியும் சூளைமேட்டைச் சேர்ந்த திரைப்பட உதவி இயக்குநர் சந்துருவும் காதலித்து வந்தனர். இந்த காதலுக்கு முதலில் சேரன் குடும்பத்தினர் ஆதரவு தெரிவித்தனர். பின்னர், சந்துருவுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகக் கூறி காதலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக சேரன் கூறி வந்தார்.

இந்தப் பிரச்னை தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் தாமினியை, அவர் படித்த பள்ளி தாளாளர் வீட்டில் தங்கியிருக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த நிலையில், சேரன் சென்னை பெருநகர காவல் ஆணையர் எஸ். ஜார்ஜை சந்தித்தார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 

என் மகள் தாமினி என்னிடம் மீண்டும் வருவாள் என்ற மன தைரியம் கிடைத்துள்ளது. சந்துருவைப் பற்றிய அதிகமான தகவல்கள் கிடைத்துள்ளன. முக்கியமாக சந்துருவால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணும், அவர் பெற்றோரும் காவல்துறையினரிடம் சாட்சி அளித்துள்ளனர். அதே போல அவரின் தவறான பழக்கங்கள் குறித்த ஆதாரங்கள் எனக்கு கிடைத்துக் கொண்டிருக்கின்றன. இந்த வழக்கில் காவல்துறை கண்ணியமாகவும் உண்மையாகவும் நடந்துக் கொள்கிறது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்