முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் செலவு: கோபிநாத் முண்டே மீது நடவடிக்கை இல்லை

வெள்ளிக்கிழமை, 9 ஆகஸ்ட் 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஆக. 10 - ரூ. 8 கோடி தேர்தல் செலவு தொடர்பாக கோபிநாத் முண்டே மீது நடவடிக்கை எடுப்பது இல்லை என்று தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.2009 பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா மூத்த தலைவர் கோபிநாத் முண்டே ரூ.8 கோடி தேர்தல் செலவு செய்ததாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக தேர்தல் கமிஷனில் புகார் செய்யப்பட்டு அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுபற்றி தேர்தல் கமிஷன் விசாரணை நடத்தியது. தேர்தல் முடிந்து 4 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் ரூ.8 கோடி செலவு செய்ததற்கான ஆதாரங்களை கண்டுபிடிப்பது சிரமம் என்று அதிகாரிகள் கருதுகிறார்கள். தேர்தலின்போது அவரது தொகுதி பார்வையாளரும் ஏற்கனவே தேர்தல் செலவு கணக்குகளை தாக்கல் செய்துவிட்டார். தேர்தல் கமிஷன் கேட்ட விளக்கத்துக்கு அவரும் பதில் அளித்தார்.

அவரது விளக்கத்தால் திருப்தி அடைந்த தேர்தல் கமிஷன் கோபிநாத் முண்டே மீது நடவடிக்கை எடுப்பது இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளது. தேவைப்பட்டால் அவருக்கு சம்மன் அனுப்பி நேரில் விளக்கம் கேட்பது என்று தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்