முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தினசரி 30 லிட்டர் பால்: மாடு ரூ.25 லட்சத்துக்கு விற்பனை

வெள்ளிக்கிழமை, 9 ஆகஸ்ட் 2013      இந்தியா
Image Unavailable

 

சண்டிகர், ஆக. 10 ​- ஒரு எருமை மாடு ரூ. 25 லட்சத்துக்கு விற்பனையாகி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. அரியானா மாநிலம் சிங்க்வா காஸ் கிராமத்தில்தான் இந்த எருமை மாடு உள்ளது. தினசரி 30 லிட்டர் பால் கொடுக்கும் இந்த எருமை மாடு, மாடுகளுக்காக நடத்தப்படும் பல்வேறு அழகிப் போட்டிகளிலும் கலந்து கொண்டு பரிசுகளையும் வாரிக் குவித்து பேரழகியாக வலம் வந்தது குறிப்பிடத்தக்கது. அந்த காஸ்ட்லியான எருமை மாட்டின் பெயர் லட்சுமி என்பதாகும். 2 ஆண்டுகளுக்கு முன்புதான் லட்சுமியை ரூ. 2.5 லட்சத்துக்கு வாங்கியிருந்தார் அதன் உரிமையாளர் கபூர் சிங். ஒரு நாளைக்கு 30 லிட்டர் பால் கொடுக்கிறதாம். வீட்டுக்கு வந்தது முதலே கபூர் சிங்குக்கு நிறைய நல்லது நடந்துள்ளதாம். அழகே நீ பேரழகி மேலும் மாடுகளுக்காக நடத்தப்படும் அழகிப் போட்டிகளுக்கும் தவறாமல் போய் நின்று விடுமாம் இந்த லட்சுமி. இது போய் விட்டாலே முதல் பரிசுதானாம். அப்படி ஒரு வெற்றி ராசியும் கூட. 

ஆந்திராவிலிருந்து ஓடி வந்த ராஜீவ் இந்த மாட்டின் பெருமை, மகாத்மியம் கேள்விப்பட்டு ஆந்திராவைச் சேர்ந்த ராஜீவ் சர்பான்ச் என்பவர் ஹரியானா விரைந்தார். கபூர் சிங்கைச் சந்தித்தார். லட்சுமி எனக்கு வேணும் லட்சுமியை தனக்குத் தந்து விடுமாறும், எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன் என்றும் கூறினார் ராஜீவ். கபூர் சிங், ரூ. 25 லட்சம் கொடுத்து விட்டு மாட்டை ஓட்டிச் செல்லுங்கள் என்று கூற, அதை உடனே ஏற்றுக் கொண்டாராம் ராஜீவ் சர்பான்ச். மாட்டை வாங்கிய புதிய ஓனரான ராஜீவ் சர்பான்ச் கூறுகையில், லட்சுமி ரொம்ப ராசியானவள். இவள் வந்த நேரம் எனக்கு நன்றாக இருக்கிறது. அடுத்த வருடம் ஜனவரி மாதம் ஆந்திராவில் மாடுகளுக்கான அழகிப் போட்டி நடக்கிறது. அதில் முதல் பரிசு ஒரு கிலோ தங்கமாகும். அதை என் லட்சுமி நிச்சயம் வெல்வாள் என்று நம்பிக்கை தெரிவித்தார். இந்த நிலையில் லட்சுமியை விற்று விட்டு இப்போதும் ஏங்கிக் கொண்டிருக்கிறார் கபூர் சிங். இதுகுறித்து அவர் கூறுகையில், கன்றுக் குட்டியுடன் என் வீட்டுக்கு முதல் முறையாக லட்சுமி வந்தது இன்னும் என் நினைவில் உள்ளது. அதை மறக்க முடியாது. தனது முதல் போட்டியிலேயே அது ரூ. 21,000 பரிசைப் பெற்றுக் கொடுத்தது என்றார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago