முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரவீந்தர் நாத் தாகூர் பெயரில் சர்வதேச விருது அமைப்பு

ஞாயிற்றுக்கிழமை, 8 மே 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,மே.- 8 - மறைந்த தேசிய கவிஞரும் நோபல் பரிசு பெற்றவருமான ரவீந்தர் நாத் தாகூர் பெயரில் சர்வதேச விருது ஏற்படுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ரவீந்தர்நாத் தாகூர் 150-வது பிறந்த தின கொண்டாட்டத்தை இந்தியாவும் வங்கதேசமும் சேர்ந்து கொண்டாடுகின்றன. ரவீந்தர்நாத் 150-வது பிறந்த தினத்தை நேற்று டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தொடங்கிவைத்து பேசினார். வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவில் ரவீந்தர் நாத் தாகூர் 150-வது பிறந்த தினவிழாவை இந்திய துணைஜனாதிபதி ஹமீத் அன்சாரி தொடங்கிவைத்தார். இதனையொட்டி நடைபெற்ற பல்வேறு கலைநிகழ்ச்சிகளிலும் அவர் கலந்துகொண்டார்.
புதுடெல்லியில் நேற்று ரவீந்தர்நாத் தாகூர் 150-வது பிறந்த தின விழாவை பிரதமர் மன்மோகன் சிங் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறுகையில் தாகூர் மிகப்பெரிய சிந்தனையாளர். அவரது கற்பனைக்கும் அறிவாற்றலுக்கும் ஒரு அளவே இல்லை என்று கூட கூறலாம் என்றார் . அவரது பாடல்கள் உலக அளவில் சகோதரத்துவத்தையும் நட்புறவையும் வளர்க்கும் வகையில் இருக்கிறது. இதை பாராட்டி அவரது பெயரில் சர்வதேச அளவில் ஒரு உயரிய விருதை இந்த ஆண்டு முதல் உருவாக்கப்படும். தாகூர் மாதிரியே தொண்டு புரியும் கவிஞர்கள் மற்றும் சமூக ஆர்வாலர்களில் மிகச்சிறந்த முறையில் பணியாற்றும் ஒருவருக்கு இந்த விருது வழங்கப்படும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் மேலும் கூறினார். விருது குழு என் தலைமையில் இயங்கும். இந்த 150-வது பிறந்த தினம் கொண்ட்டாட்டம் முடிவதற்குள் முதல் விருது வழங்க வேண்டியிருக்கும் என்றும் மன்மோகன் சிங் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்