முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தியேட்டர் அதிபர்கள் மறுப்பு: விஜய் படம் ரிலீசில் சிக்கல்

சனிக்கிழமை, 10 ஆகஸ்ட் 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை.ஆக.11- விஜய்யின் 'தலைவா' படம் ரிலீசாவதில் சிக்கல் நீடிக்கிறது. நேற்று தமிழகம் முழுவதும் இப்படம் வெளியாக இருந்தது. தியேட்டர்களுக்கு வெடி குண்டு மிரட்டல்கள் வந்ததால் படத்தை நிறுத்தினர். ரசிகர்கள் தியேட்டர்களுக்கு கூட்டம் கூட்டமாய் வந்து படம் வெளியாகாததால் ஏமாற்றம் அடைந்தனர். மறியலிலும் ்டுபட்டார்கள். ஆனால் கேரளா, ஆந்திரா, கர்நாடகம் மற்றும் மும்பையில் 'தலைவா' படம் திட்டமிட்டபடி நேற்று ரிலீசானது. இதனால் விஜய் ரசிகர்கள் படம் பார்க்க வெளி மாநிலங்களுக்கு படையெடுத்தனர்.

வெளி நாடுகளிலும் படம் திரைக்கு வந்தது. இதற்கிடையில் போலீஸ் டி.ஜி.பி. ராமானுஜம் தலைவா படம் வெளியாவதை தள்ளி வைக்குமாறு தமிழக காவல் துறை கோரவோ அல்லது ஆலோசனை கூறவோ இல்லை என்று அறிக்கை வெளியிட்டார். இதையடுத்து ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

'தலைவா' படம் நேற்று வெளியாகும் என எதிர்பார்த்தனர். டி.ஜி.பி. அறிக்கையை தொடர்ந்து தியேட்டர் அதிபர்களும், விநியோகஸ்தர்களும் அவசர கூட்டம் நடத்தினார்கள். நள்ளிரவுவரை விவாதித்தார்கள். இக்கூட்டத்தில் 'தலைவா' படத்தை திரையிட ஒருமித்த முடிவு ஏற்படவில்லை என கூறப்படுகிறது. 'தலைவா' படத்துக்கு ஒதுக்கப்பட்ட தியேட்டர்கள் பரத்தின் ஐந்து ஐந்து ஐந்து, ஷாருக்கானின் சென்னை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட படங்களுக்கு ஒதுக்கப்பட்டு விட்டதாக சுட்டிக் காட்டப்பட்டது.

ஏற்கனவே ஐந்து ஐந்து ஐந்து படத்தை ஆகஸ்டு 15-ல் வெளியிடத்தான் முடிவு செய்து இருந்தனர். 'தலைவா' வராததால் முன் கூட்டி ரிலீசாகிறது. அத்துடன் 'தலைவா' படத்துக்கு வரி விலக்கு கிடைக்காதது பற்றியும் தியேட்டர் அதிபர்கள் சுட்டி காட்டினர். தணிக்கை குழு தலைவா படத்துக்கு 'யு' சான்றிதழ் அளித்துள்ளது. வரி விலக்கு குழுவினர் படத்தை பார்த்து 400 ஆங்கில வார்த்தைகள் படத்தில் இடம் பெற்றுள்ளது என்றும் வன்முறை தூக்கலாக உள்ளது என்றும் தனி மனிதன் சட்டத்தை கையில் எடுப்பது போல் காட்சிகள் உள்ளதென்றும் கூறி வரி விலக்கு அளிக்க ஆட்சேபம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த காரணங்களால் தலைவா படத்தை உடனடியாக திரையிட முடியாது என்றும் தயாரிப்பாளரிடம் புதிய உடன்பாடு செய்து கொண்டு வெளியிடலாம் என்றும் கூறினர். இதனால் படம் இன்றும் வெளியாக வில்லை. சுதந்திர தினத்தையொட்டி வருகிற 15 அல்லது 16-ந்தேதி 'தலைவா' ரிலீசாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்