முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெகன் மோகன் ராஜினாமா எம்.பி.யை பதவியை துறந்தார்

சனிக்கிழமை, 10 ஆகஸ்ட் 2013      இந்தியா
Image Unavailable

ஐதராபாத், ஆக.11 - ஆந்திர மாநிலத்தை இரண்டாக பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவரும், கடப்பா தொகுதி எம்.பி.யுமான ஜெகன் மோகன் ரெட்டி தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். அவரை போலவே அவரது தாயார் ஒய்.எஸ்.விஜயாவும் சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார். இவர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸின் கவுரவ தலைவராகவும், கடப்பா மாவட்டத்தின் புலிவெந்துலா தொகுதியின் எம்.எல்.ஏ.வாகவும் உள்ளார். இருவருமே தத்தம் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். எம்.பி. பதவியை ராஜினாமா செய்த ஜெகன் மோகன் தற்பொழுது ஊழல் குற்றச்சாட்டின் பேரில் சிறைசாலையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் தனது ராஜினாமா கடிதத்தை பாராளுமன்ற சபாநாயகருக்கு பேக்ஸ் மூலம் அனுப்பி வைத்தார். தபால் மூலமும் அது அனுப்பப்படும் என்று இவரது கட்சி எம்.பி.யான ராஜ்மோகன் ரெட்டி செய்தியாளகளிடம் தெரிவித்தார். இவர்களது ராஜினாமா பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்