முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரோஜர்ஸ் டென்னிஸ் போட்டி: வில்லியம்ஸ் முன்னேற்றம்

சனிக்கிழமை, 10 ஆகஸ்ட் 2013      விளையாட்டு
Image Unavailable

 

டொராண்டோ, ஆக. 11 - கனடாவில் நடைபெற்று வரும் ரோஜர் ஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் அமெரிக்க முன்னணி வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் அரை இறுதிக்கு முன்னேறினார். ஆனால் நடப்பு சாம்பியனான பெட்ரா கிவிடோவா கால் இறுதிச் சுற்றில் ருமேனிய வீராங்கனயிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார். 

மகளிருக்கான டபிள்யு.டி.ஏ. சார்பில்  சுற்றுப் பயணப் போட்டிகளில் ஒன்றா  ன ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டி கனடாவின் தலைநகரான டொராண்டோவில் நடைபெற்று வருகிறது. 

இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டத் தைக் கைப்பற்ற முன்னணி வீராங்க னைகள் களம் இறங்கி உள்ளனர். இந்த ப் போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தில் உள்ளது. 

முக்கிய  போட்டிகளில் ஒன்றான இதி ல் பங்கேற்று வரும் முன்னணி வீராங்க னைகள் தரமான ஆட்டத்தை வெளிப்ப டுத்தி ரசிகர்களின் ஆவலைத் தணித்து வருகின்றனர். 

மகளிருக்கான ஒற்றையர் பிரிவின் கால் இறுதிச் சுற்று ஒன்று நடந்தது. இதில் அமெரிக்க முன்னணி வீராங்கனையான செரீனா வில்லியம்சும், சுலோ வேக்கிய வீராங்கனையும் மோதினர். 

இதில் அனுபவம் வாய்ந்த செரீனா அபாரமாக ஆடி, 6 -1, 6 -1 என்ற நேர் செட் கணக்கில் மெக்டலீனா ரிபான் கோவாவை தோற்கடித்து அரை இறுதி ச் சுற்றுக்குள் நுழைந்தார். இந்தப் போ  ட்டி சுமார் 1 மணி நேரத்தில் முடிவுக்கு வந்தது. 

உலக நம்பர் - 1 வீராங்கனையான செரீ னா அடுத்ததாக அரை இறுதிச் சுற்றில் போலந்து வீராங்கனை அக்னீஸ்கா ரட்வான்ஸ்காவுடன் மோத இருக்கிறார். 

மற்றொரு கால் இறுதியில் நடப்பு சாம் பியனான பெட்ரா கிவிடோவாவும், ருமேனிய வீராங்கனை சொரனா சிர்ஸ் டியாவும் மோதினர். 

இதில் தகுதி நிலை பெறாத ருமேனிய வீராங்கனை சிறப்பாக ஆடி, நடப்பு சாம்பியனை அதிர்ச்சி தோல்வி அடை ய வைத்தார். இறுதியில் அவர் 4 -6, 7 -5, 6 -2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். 

சீன வீராங்கனை லீனா மற்றொரு கால் இறுதியில் 7 -6 (7), 6 -2 என்ற நேர் செட் கணக்கில் டொமினிகா சிபுல் கோவாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தாவினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்