முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஷாருக்கான் மீது மும்பை நீதிமன்றத்தில் வழக்கு

சனிக்கிழமை, 10 ஆகஸ்ட் 2013      சினிமா
Image Unavailable

 

மும்பை, ஆக. 11 - வாடகை தாய் மூலம் பிறந்த குழந்தையின் பாலினத்தை அறிய முயன்றதாக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மற்றும் அவரது மனைவி மீது மும்பை கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நடிகர் ஷாருக்கான் மற்றும் அவரது மனைவி கவுரிக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ளன. சமீபத்தில் அவர்களுக்கு வாடகைத் தாய் மூலம் மூன்றாவது குழந்தை மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிறந்தது. இந்த குழந்தையின் பாலினத்தை கருவிலேயே அறிந்து கொள்ள ஷாருக்கான் தம்பதி மருத்துவமனையில் சோதனைக்கு ஏற்பாடு செய்ததாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாயின. 

வாடகைத் தாய் மூலம் பிறந்த குழந்தையின் பாலினத்தை அறிய முயன்றதாக ஷாருக்கான் மற்றும் அவரது மனைவி கவுரி மீது வழக்கறிஞர் வர்ஷா தேஷ் பாண்டே மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் ஷாருக்கான் மீது தாம் அளித்த புகாரின் பேரில் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், அதனாலேயே நீதிமன்றத்தை நாடியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக ஷாருக்கான் தம்பதி மற்றும் நகராட்சி அதிகாரிகளுக்கு மாஜிஸ்திரேட் உதய் பரத்வாத் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். வழக்கு விசாரணை செப்டம்பர் 12 ம் தேதி நடைபெறும் என்றும் அவர் அறிவித்தார். இதனிடையே தன் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது குறித்து ஷாருக்கான் மும்பையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், எங்களுக்கு மகன் பிறந்திருப்பதால் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறோம். அவன் நலமாக இருப்பான் என்று நம்புகிறேன். ஆனால் இப்போது நடக்கும் சில விஷயங்கள் வருத்தமளிக்கிறது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்