முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராணுவ வீரர்கள் கொலை: டெல்லி-லாகூர் பஸ் சிறைபிடிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 11 ஆகஸ்ட் 2013      இந்தியா
Image Unavailable

 

அட்டாரி, ஆக.12 - காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் 5 பேர் கொல்லப்பட்டதைக் கண்டித்து லாகூர் பஸ்ஸை சிறைப்பிடித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதுபற்றி இந்திய அரசிடம் பாகிஸ்தான் புகார் தெரிவித்துள்ளது.காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் பகுதியில் இந்திய எல்லைக்குள் அத்துமீறி புகுந்த பாகிஸ்தான் ராணுவத்தின் சிறப்புப் படையினர் இந்திய ராணுவ வீரர்கள் 5 பேரை சுட்டுக்கொன்றனர். தற்போது அகே பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் டெல்லியிலிருந்து அமிர்தசரஸ், அட்டாரி, வாகா எல்லை வழியாக பாகிஸ்தானிலுள்ள லாகூருக்குச் செல்லும் பஸ்ஸை காங்கிரஸ் இளைஞர் அணியினர் மறித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

இதனால் இந்க பஸ் அமிர்தசரஸில் நிறுக்கப்பட்டது. பஞ்சாப் மாநில இளைஞர் அணிச் செயலாளர் விக்ரம்சிங் தலைமையில் காங்கிரஸார் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதையடுத்து இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் அட்டாரி வாகா பகுதியில்  பதற்றம் ஏற்பட்டது. இந்த பஸ்ஸில் பாகிஸ்தானைச் சேர்ந்த 7 பயணிகள் உள்பட 14 பேர் சிறை பிடிக்கப்பட்டனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் போலீஸார் அங்கு விரைந்து சென்று  ஆர்ப்பாட்டம் செய்தவர்களிடமிருந்து பயணிகளை மீட்டனர்.  இந்த சம்பவத்துக்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுபற்றி பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செயலாளர் மன்சூர் அலி மேமன் கூறுகையில் இந்த சம்பவம் குறித்து இந்திய அரசிடம் புகார் தெரிவிக்க உள்ளோம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்