முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிரியா ராணுவ தாக்குதலில் 20 பேர் சாவு

ஞாயிற்றுக்கிழமை, 11 ஆகஸ்ட் 2013      உலகம்
Image Unavailable

பெய்ரூட், ஆக. 12 - சிரியாவின் வடமேற்கு மாகாணமான லட்கியாவின் மீது ராணுவத்தினர் நடத்திய ராக்கெட் தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதலில் அப்பாவி மக்கள் 10 பேரும் அரசு எதிர்ப்பாளர்கள் 6 பேரும், வெளிநாட்டை சேர்ந்த 4 பேரும் உயிரிழந்தனர் என்று மனித உரிமை அமைப்பின் இயக்குனர் ரமி அப்துல் ரஹ்மான் தெரிவித்தார். தாக்குதலில் காயமடைந்தவர்கள் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என்றும் அவர் கூறினார். மற்றொரு சம்பவத்தில் அலெப்போ மாகாணத்தின் கிழக்கு பகுதியில் உள்ள கிராமத்தில் அரசு படையினர் நடத்திய தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டதாகவும் மனித உரிமை அமைப்பினர் தெரிவித்தனர். சிரியா அதிபருக்கு எதிரான போராட்டம் 2011 ம் ஆண்டு தொடங்கியது. சிரியாவின் வடக்கில் உள்ள பெரும்பான்மையான பகுதிகள் அரசு எதிர்ப்பு படையினரின் வசம் உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்