முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தோனேசியா எரிமலை வெடித்து 5 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 11 ஆகஸ்ட் 2013      உலகம்
Image Unavailable

 

ஜகார்த்தா, ஆக. 12 - இந்தோனேசியாவின் மத்திய பகுதியில் உள்ள எரிமலை வெடித்தது. பலாயூ தீவில் அமைந்துள்ள ரொகடென்டா எரிமலை வெடித்து அதிலிருந்து வெளியேறிய தீப்பிழம்புகள் அருகில் இருந்த கடற்கரையில் விழுந்தது. இதில் 2 சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழந்ததாக எரிமலை ஆய்வு மைய தலைவர் சுரோனோ தெரிவித்தார். கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்தே ரொக்டென்டா எரிமலை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுவந்தது. எரிமலையில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு மக்கள் நடமாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

எரிமலை வெடித்ததை தொடர்ந்து 4 மணி நேரத்துக்கு தீப்பிழம்பு கக்கி வந்தது. எரிமலை வெடித்த போது உயிரிழந்தவர்கள் தடை செய்யப்பட்ட இடத்தில் இருந்தனரா என்பது தெரியவில்லை. எரிமலை வாயிலிருந்து சுமார் 2 ஆயிரம் மீட்டர் தூரத்துக்கு தீப்பிழம்புகள் பரவின என்று சரோனோ தெரிவித்தார். இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள மொபி எரிமலை கடந்த 2010 ம் ஆண்டு வெடித்ததில் 350 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago