முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊட்டியில் கோடைவிழா மற்றும் 10-வது ரோஜா காட்சி துவங்கியது

ஞாயிற்றுக்கிழமை, 8 மே 2011      தமிழகம்
Image Unavailable

ஊட்டி, மே.- 8 - ஊட்டியில் துவங்கிய கோடை விழா மற்றும் 10-வது ரோஜா காட்சியை ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கண்டு களித்தனர். நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசனையொட்டி நடத்தப்படும் கோடை விழாவின் துவக்க விழா 10-வது ரோஜாகாட்சியுடன் நேற்று துவங்கியது. ரோஜா பூங்காவில் துவங்கிய இவ்விழாவினை மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்து பூங்காவில், ஊட்டி தோட்டக்கலைத்துறை சார்பில் 12 அடி நீளத்தில் 8 ஆயிரம் ரோஜா மலர்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள `மெகா ரோஸ்' கோபுரம், கோவை தோட்டக்கலைத்துறை சார்பில் 7,500 ரோஜா மலர்களைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்த 9 அடி உயரம் கொண்ட டயனோசர், தர்மபுரி தோட்டக்கலைத்துறை சார்பில் 12 ஆயிரம் மஞ்சள் ரோஜாக்களினால் வடிவமைக்கப்பட்டிருந்த 7 அடி மற்றும் 6 அடி உயரம் கொண்ட இரண்டு டால்பின்நோஸ், சேலம் மாவட்ட தோட்டக்கலைத்துறை சார்பில் 2,500  ரோஜா மலர்களால் அமைக்கப்பட்டிருந்த மயில், மதுரை மாவட்ட தோட்டக்கலைத்துறை சார்பில் 1008 ரோஜா மலர்களால் வடிவமைக்கப்பட்டிருந்த மீனாட்சி அம்மன் கோவில் கோபுரம்   மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் வைக்கப்பட்டிருந்த 4 ஆயிரம் ஆகியவற்றை பார்வையிட்டார். தொடர்ந்து அரங்குகளில் வைக்கப்பட்டிருந்த ரோஜா இதழ்களினால் தயாரிக்கப்பட்ட  ரோஸ்குல்கந்த் ஆகியவற்றை பார்த்து ரசித்தார்
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் குப்புசாமி, தோட்டக்கலை இணை இயக்குநர் ஆல்தொரை, துணை துணை இயக்குநர் தர்மலிங்கம்,
உதவி இயக்குநர்கள் ஜெகதீஸ்குமார், ராம்சுந்தர், உமாராணி, பிரகாசம், ரோடா பூங்கா மேலாளர் மூர்த்தி, மாவட்ட சுற்றுலா அலுவலர் துரைராசு, நெடுஞ்சாலை கோட்டப்பொறியாளர் கந்தசாமி, மின்வாரிய செயற்பொறியாளர் ஆல்தொரை, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சங்கர வடிவேலு, நகராட்சி ஆணையாளர் குமார், பொறியாளர் ராமமூர்த்தி, நீலகிரி ரோஜா சங்க தலைவர் கிருஷ்ணகுமார், ஓட்டல் உரிமையாளர் சங்க செயலாளர் சந்திரசேகரன் மற்றும் கோவை, சேலம், கொடைக்கானல், தருமபுரி,கிருஷ்ணகிரி, மதுரை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தோட்டக்கலை துணை இயக்குநர்கள், தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஊட்டி ரோஜா பூங்காவில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான ரகங்களில் 36 ஆயிரத்திற்கும் அதிகமான ரோஜா ரகங்களின் பூத்துக்குலுங்கிய ரோஜா மலர்களை கண்ட சுற்றுலாப் பயணிகள் வியந்து மகிழ்ந்தனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்