முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ்: ரபேல் நடால் சாம்பியன்

திங்கட்கிழமை, 12 ஆகஸ்ட் 2013      விளையாட்டு
Image Unavailable

 

மான்ட்ரியல், ஆக. 13 - கனடாவில் நடைபெற்ற ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதிச் சுற் றில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் வெ ற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். பரபரப்பாக நடைபெற்ற இந்த இறுதிச் சுற்றில் உலக முன்னாள் நம்பர் -1 வீர ரான ரபேல் நடால் கனடா வீரர் மிலோசை தோற்கடித்து இந்த சாதனையை புரிந்துள்ளார். 

ஆடவருக்கான ஏ.டி.பி. மற்றும் டபிள் யு.டி. ஆகிய 2 சங்கம் சார்பில் கனடா வில் உள்ள மான்ட்ரியல் நகரில் ஓபன் டென்னிஸ் போட்டி கடந்த சில நாட்களாக வெகு விமர்சையாக நடந்து வந் தது. 

இந்தப் போட்டியில் சாம்பியன் பட்ட த்தைக் கைப்பற்ற முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் களத்தில் குதித் தனர். 

முக்கிய போட்டிகளில் ஒன்றான இதில் பங்கேற்று வரும் முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினர். 

ஆடவருக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிச் சுற்று ஆட்டத்தில் பட்டத்தை கைப்பற்ற ஸ்பெயின் வீரர் ரபேல் நடா லும், கனடா வீரர் மிலோஸ் ராவ்னிக் கும் மோதினர். 

இந்தப் போட்டியில் நடால் அபாரமா  ன ஆட்டத்தை வெளிப்படுத்தி 6 -2, 6 -2 என்ற நேர் செட் கணக்கில் கனடா வீரர் மிலோசை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றார். 

கடந்த 1956-ம் ஆண்டு கனடா ஓபன் இறுதிச் சுற்றில் கனடா வீரர் ராபர்ட் பெட்ரார்ட் என்பவர் வெற்றி பெற்றார். அதன் பிறகு கனடாவீரர் யாரும் இந்தப் போட்டியில் இறுதிச் சுற்றை எட்ட வில்லை. தற்போது தான் மிலோஸ் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார். 

எனவே மிலோசிற்கு உள்நாட்டு ரசிகர் களின் அமோக ஆதரவு இருந்ததுஉ. ஆனால் நடால் ஆட்டத்திற்கு மிலோ சால் ஈடுகொடுத்து ஆட முடியவில் லை. இதனால் மிலோசிற்கு ரன்னர்ஸ் அப் பட்டம் கிடைத்தது. 

இந்த ஆண்டில் நடால் கைப்பற்றும் 8 -வது கோப்பை இதுவாகும். இதுவரை அவர் மொத்தம் 58 கோப்பையை கை ப்பற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது. 

ராவ்னிக் தோல்வி அடைந்தாலும், இறுதிப் போட்டிக்கு அவர் தகுதி பெற்றதால் டென்னிஸ் தரவரிசையில் 10 -வ து இடத்திற்கு அவர் முன்னேறி இருக்கிறார். 

முதல் 10 இடத்தில் உள்ள வீரர்களில் ராவ்னிக் தான் இளம் வீரராவார். அவ ருக்கு வயது 22 தான். இந்த வெற்றியின் மூலம் நடால் 4-வது இடத்திலிருந்து 3- வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago