முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கி கொள்ளையில் ஈடுபட்ட ராணுவ வீரர் கைது பரபரப்பு வாக்குமூலம்

ஞாயிற்றுக்கிழமை, 8 மே 2011      தமிழகம்
Image Unavailable

நெல்லை, மே - 8 - வள்ளியூர் அருகே துப்பாக்கியால் வங்கி ஊழியரை சுட்டு கொள்ளையில் ஈடுபட்ட ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார். நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே தளபதிசமுத்திரம் கீழுர் கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கடந்த 2 ந் தேதி முகமூடி அணிந்த மர்ம நபர் துப்பாக்கியுடன் சென்று கொள்ளையடிக்க முயன்றார் அப்போது அந்த மர்ம நபரை வங்கியின் உதவி செயலாளர் சண்முகசங்கர்,காசாளர் ராஜா ஆகியோர் தடுத்தனர்.அவர்களை அந்த மர்ம நபர் துப்பாக்கியில் சுட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். துப்பாக்கி சூட்டில் காயமடைந்த சண்முக சங்கர், ராஜா ஆகிய இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் நாங்குனேரி கார் டிரைவர் ஏர்வாடி போலீசில் சரணடைந்து தளபதி சமுத்திரம் கூட்டுறவு வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர் தன்னுடைய காரில் வந்ததாக கூறினார். இந்த கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்த நெல்லை சரக டிஐஜி சண்முகராஜேஸ்வரன் நேரடியாக களத்தில் இறங்கினார். கைது செய்யப்பட்ட கார் டிரைவரிடம் விசாரணை நடத்தியதில் கார் டிரைவர் கூறிய தகவல்களின் அடிப்படையில் அந்த மர்ம நபரின் புகைப்படம் கம்யூட்டரின் மூலம் வரையப்பட்டது. இந்த படத்தின் மூலம் கொள்ளையனை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். கொள்ளையனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடிவந்தனர்.
இந்தநிலையில் சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்ட தோட்டாக்கள் ராணுவத்தில் பயன்படுத்தப்படும் இன்ஸா ரக துப்பாக்கி தோ
ட்டாக்கள் என தெரியவந்தது. ராணுவத்தில் மட்டுமே இந்த துப்பாக்கி பயன்படுத்தப்படுவதால் இதில் ஈடுபட்டவர் ராணுவ வீரராக இருக்கலாம் என்ற அடிப்படையில் போலீசார் கார் டிரைவரிடம் அந்த மர்ம நபர் இறங்கிய பகுதியில் உள்ள ஊர்களில் விசாரித்தனர்.
இதில் வள்ளியூர் அருகே உள்ள பொன்காத்தான் குடியிருப்பை சேர்ந்த உலகநாதன் என்பவரின் மகன் பன்னீர் (வயது 30) என்பவர் ராணுவத்தில் பணியாற்றி வந்ததும், சில மாதங்களுக்கு முன்பு சஸ்பெண்ட் செய்யப்பட்ட இவர் சொந்த ஊரில் இருந்து வந்தார். அங்கு சிலரிடம் ஏற்பட்ட தகராறில் தனது குடும்பத்துடன் தளபதிசமுத்திரத்தில் குடியிருந்து வந்ததும் தெரியவந்தது.
ஆகவே அவர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என கருதிய தனிப்படை போலீசார் அவரிடம் விசாரணை நடத்த சென்றனர். அப்போது அவர் மனைவியுடன் மாயமாகிஇருப்பது தெரியவந்தது. இதனைல் கொள்ளை முயற்சியில் பன்னீர் ஈடுபட்டது உறுதியானது.இதையடுத்து அவரது செல்போன் நம்பரை வாங்கி அவர் எங்கு இருக்கிறார் என கண்டு பிடிக்கும்போது அவர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கடலோரகிராமம் ஒன்றில் தங்கியிருப்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் அங்கு வந்து பன்னீரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் தளபதி சமுத்திரம் வங்கியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அவரை நெல்லைக்கு அழைத்து வந்தனர்.
அவரிடம் டிஐஜி சண்முகராஜேஸ்வரன், எஸ்.பி. விஜயேந்திரபிதாரி ஆகியோர் விசாரணை நடத்தியபோது அவர் குறுகிய காலத்தில் அதிக பணம் சம்பாதிக்கும் ஆசையில் கொள்ளையடிக்க முயன்றதாக கூறியுள்ளார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago