முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸி.க்கு எதிரான 4-வது டெஸ்ட்: இங்கிலாந்து வெற்றி

செவ்வாய்க்கிழமை, 13 ஆகஸ்ட் 2013      விளையாட்டு
Image Unavailable

 

செஸ்டர் லீ ஸ்ட்ரீட், ஆக. 14 - ஆஷஸ் தொடர் 4-வது கிரிக்கெட் டெ ஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 74 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இங்கிலாந்து அணி 3 - 0 என்ற கணக்கில் தொடரைக் கைப் ப ற்றி சாதனை படைத்துள்ளது. 

இங்கிலாந்து அணியின் முன்னணி வே கப் பந்து வீச்சாளரான பிராட் 2-வது இன்னிங்சில் அபாரமாக பந்து வீசி 6 முக்கிய விக்கெட்டைக் கைப்பற்றி அணிக்கு வெற்றி தேடித் தந்தார். அவரு க்கு ஆதரவாக, பிரஸ்னன் மற்றும் ஸ்வான் ஆகியோர் பந்து வீசினர். 

முன்னதாக இங்கிலாந்து அணி தரப்பி ல், இயான் பெல் சதம் அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். அவ ருக்குப் பக்கபலமாக கேப்டன் கூக், டிராட், பீட்டர்சன், பிரஸ்னன், பேர்ஸ் டோ மற்றும் ஸ்வான் ஆகியோர் ஆடி னர். 

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 4 -வது டெஸ்ட் போட்டி செஸ்டர்லீ ஸ்ட்ரீட்டி ல் உள்ள ரிவர்சைடு மைதானத்தில் 9 -ம் தேதி துவங்கி 12-ம் தேதி முடிந்தது. 

இந்தப் போட்டியில் முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன் னிங்சில் 92 ஓவரில் அனைத்து விக்கெ ட்டையும் இழந்து 238 ரன்னை எடுத் தது. 

இங்கிலாந்து அணி தரப்பில், கேப்டன் கூக் 51 ரன்னையும், டிராட் 49 ரன்னையும், பீட்டர்சன் 26 ரன்னையும், பிரைய ர் 17 ரன்னையும் எடுத்தனர். 

பின்பு முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ் திரேலிய அணி 89.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 270 ரன்னை எடுத்தது. 

ஆஸ்திரேலிய அணி தரப்பில், துவக்க வீரர் ரோஜர்ஸ் 250 பந்தில் 110 ரன் எடுத் தார். தவிர, வாட்சன் 68 ரன்னையும், ஹாரிஸ் 28 ரன்னையும், ஸ்மித் 17 ரன் னையும் எடுத்தனர். 

அடுத்து 2-வது இன்னிங்சை ஆடிய இங் கிலாந்து அணி 95.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 330 ரன்னை எடுத்தது. 

இங்கிலாந்து அணி தரப்பில், இயான் பெல் 210 பந்தில் 113 ரன்னை எடுத்தார். தவிர, பிரஸ்னன் 45 ரன்னையும், பீட்டர் சன் 44 ரன்னையும், கேப்டன் கூக் 22 ரன் னையும், டிராட் 23 ரன்னையும், ஸ்வா ன் 30 ரன்னையும் எடுத்தனர். 

ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்சி ல் 299 ரன்னை எடுத்தால் வெற்றி பெற லாம் என்ற இலக்கை இங்கிலாந்து அணி வைத்தது. ஆனால் அடுத்து ஆடி ய அந்த அணி 68.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 224 ரன்னை எடுத்தது. 

இதனால் இந்த 4-வது டெஸ்டில் இங்கி லாந்து அணி 74 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 3 -0 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. 

ஆஸ்திரேலிய அணி தரப்பில், துவக்க வீரர் வார்னர் அதிகபட்சமாக 113 பந் தி ல் 71 ரன் எடுத்தார். இதில் 10 பவுண்டரி  மற்றும் 1 சிக்சர் அடக்கம். தவிர, ரோஜ ர்ஸ் 49 ரன்னையும், கவாஜா மற்றும் கேப்டன் கிளார்க் இருவரும் தலா 21 ரன்னையும், சிட்லே 23 ரன்னையும் எடு த்தனர். 

இங்கிலாந்து அணி சார்பில் முன்னணி வேகப் பந்து வீச்சாளரான பிராட் 50 ரன்னைக் கொடுத்து 6 விக்கெட் கைப் பற்றினார். தவிர, பிரஸ்னன் மற்றும் ஸ்வான் தலா 2 விக்கெட் எடுத்தனர். 

இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக பிராட் தேர்வு செய்யப்பட்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்