முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங். ஆளும் மாநிலங்கள் அனைத்திலும் மோசடி: யஷ்வந்த்

புதன்கிழமை, 14 ஆகஸ்ட் 2013      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, ஆக. 14 - காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்கள் அனைத்திலுமே நில மோசடியில் சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேரா கைவரிசை காட்டியிருக்கிறார் என்று பா.ஜ.க. மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா சாடியுள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள யஷ்வந்த் சின்ஹா, சோனியா மருமகன் வதேராவின் நில மோசடி தொடர்பாக சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்த வேண்டும். ராபர்ட் வதேராவை பாதுகாக்க அரசு முயற்சிக்கிறது. அவர் ஹரியானாவில் மட்டும் நில மோசடியில் ஈ்டுபடவில்லை.

காங்கிரஸ் கட்சி ஆளுகின்ற அனைத்து மாநிலங்களிலுமே தமது கைவரிசையை காட்டியிருக்கிறார். இது பற்றி நாடாளுமன்றத்தில் சிறப்பு விவாதம் நடத்தப்பட வேண்டும்.

நாடாளுமன்றத்தில் ராபர்ட் வதேராவின் பெயரை உச்சரித்தாலே போதும்.. அனைத்து காங்கிரஸ் எம்.பிக்களும் எழுந்து நின்று கூச்சல் போட்டு குழப்பத்தை உருவாக்குகின்றனர். அவர் வங்கி விதிகள், வருமான வரித்துறை உள்ளிட்ட அனைத்தையுமே ஏமாற்றிக் கொண்டு வருவதால் சுப்ரீம் கோர்ட்டின் கண்காணிப்பிலான சிறப்பு விசாரணை அவசியம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago