முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கானில் அமெரிக்க படைகள் மீது தாக்குதல் அதிகரிக்கும் தலிபான் தீவிரவாத இயக்கம் எச்சரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 8 மே 2011      உலகம்
Image Unavailable

காபூல்,மே.- 8 - அல்கொய்தா தீவிரவாத இயக்க தலைவன் பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதையடுத்து ஆப்கானிஸ்தானில் அமெரிக்க கூட்டுப்படைகளுக்கு எதிரான தாக்குதல் அதிகரிக்கப்படும் என்று தலிபான் தீவிரவாத இயக்கம் எச்சரித்துள்ளது. பாகிஸ்தானில் பதுங்கியிருந்த ஒசாமா பின்லேடன் கடந்த திங்கள்கிழமை அன்று அதிகாலையில் அமெரிக்க படையினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டான். இதுகுறித்து முதலில் தலிபான் இயக்க தீவிரவாத இயக்கம் சார்பாக ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் பின்லேடன் கொல்லப்பட்டது குறித்து இன்னும் உறுதி செய்யப்படாததால் அது குறித்து தற்போது கருத்து எதுவும் கூறமுடியாது என்று தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் தலிபான் இயக்கம் சார்பாக நேற்று மேலும் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. பின்லேடன் சுட்டுக்கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் ஆப்கானிஸ்தானில் ஆக்கிரமிப்பு செய்துள்ள வெளிநாட்டு கூட்டுப்படைகளுக்கெதிரான தலிபான் தீவிரவாத தாக்குதல் அதிகரிக்கும். பின்லேடன் கொல்லப்பட்டதால் தற்போது சந்தோஷப்படுபவர்கள் விரைவில் ரத்தக் கண்ணீர் வடிக்க வேண்டியிருக்கும் என்றும் அந்த அறிக்கையில் தலிபான் இயக்கம் கடுமையாக எச்சரித்துள்ளது. பின்லேடன் சுட்டுகொல்லப்பட்டுவிட்டதால் அவனுக்காக மேலும் நூற்றுக்கணக்கானோர் அர்ப்பணிப்பு செய்ய வேண்டியிருக்கும். அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தை தொடர்ந்து நடத்துவோம் என்றும் அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்