முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பின்லேடனை மறைத்து வைத்த விவகாரம் பாக். ஐஎஸ்ஐ தலைவர் அமெரிக்கா பயணம்

ஞாயிற்றுக்கிழமை, 8 மே 2011      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத்,மே -8 - பாகிஸ்தானில் பின்லேடன் மறைந்திருந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்க பாகிஸ்தானின் உளவு ஸ்தாபனமான ஐ.எஸ்.ஐ. தலைவர் பாஷா நேற்று அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.  அமெரிக்காவின் முதல் எதிரி அல்கொய்தா தீவிரவாத இயக்க தலைவன் பின்லேடன்தான். அவனை உயிருடன் பிடிக்கவோ அல்லது சுட்டுக்கொல்லவா ரூ. 60 லட்சம் கோடியை செலவு செய்துள்ளது. இந்தநிலையில் அவன் கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த திங்கிட்கிழமை அதிகாலையில் அமெரிக்க படையினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டான். அவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டாலும் கடந்த 4 ஆண்டுகளாக பாகிஸ்தானில்தான் பின்லேடன் தங்கி இருந்திருக்கிறான். இது குறித்து பாகிஸ்தானில் உளவு ஸ்தாபனமான ஐ.எஸ்.ஐ.க்கு தெரியாமல் இருக்காது. அப்படி தெரிந்திருந்தும் அது குறித்து தெரிவிக்காததால் ஐ.எஸ்.ஐ. மீது அமெரிக்கா கடும் கோபம் அடைந்துள்ளது. அதனால் பின்லேடன் மறைந்திருந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் தருமாறு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. தலைவர் லெப்டினெட் ஜெனரல் ஷூஜா பாஷாவுக்கு அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது. இதனையொட்டி நேற்று பாஷா அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றார். வாஷிங்டன் நகரில் அதிபர் ஒபாமாவை சந்தித்து பின்லேடன் ஒளிந்திருந்த விவகாரம் தொடர்பாக பாஷா விளக்கம் அளிப்பார் என்று தெரிகிறது. பின்லேடன் குறித்து புலனாய்வு தகவலை பெறுவதில் கோளாறு ஏற்பட்டதுதான் அவனை பற்றி தெரியாமல் போய்விட்டது என்று பாகிஸ்தான் ராணுவமே கூறியுள்ளது.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அபோட்டாபாத் நகரில் பின்லேடன் கடந்த பல ஆண்டுகளாக வசித்து வந்துள்ளான். அதுவும் அந்த நகரில் உள்ள ஒரு சொகுசு பங்களாவில் பின்லேடன் தங்கியிருந்திருக்கிறான். இந்த சொகுசு பங்களாவிற்கு அருகில் பாகிஸ்தான் ராணுவ பயிற்சி கழகம் இருக்கிறது. அப்படி இருந்தும் பின்லேடனை பற்றி பல ஆண்டுகளாக தகவல் தெரியவில்லை. இதனால் பாகிஸ்தான் அரசு மீது அமெரிக்காவுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இந்த சந்தேகம் குறித்து விளக்கம் கேட்பதற்காக பாஷா அழைக்கப்பட்டிருக்கலாம் என்று டான் செய்தி பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்