முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகக்கோப்பை செஸ் போட்டி: சசிகிரண் முன்னேற்றம்

புதன்கிழமை, 14 ஆகஸ்ட் 2013      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி, ஆக. 15 - உலகக் கோப்பை சதுரங்கப் போட்டி யின் முதல் சுற்றில் இந்தியாவின் முன் னணி வீரர்களான சசிகிரண் மற்றும் அதிபன் இருவரும் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். 

இந்திய வீரர்கள் இருவரும் சரியான நே ரத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப் படுத்தி டை பிரேக் மூலம் வெற்றி பெ ற்றது குறிப்பிடத்தக்கது. 

தேசிய சாம்பியனான அதிபன் தன்னை விட தரவரிசையில் முன்னணியில் உள்ள ரஷ்ய வீரர் யெவ்ஜெனி அலெக்சீவுட ன் மோதினார். 

இந்தப் போட்டியில் அதிபன் யாரும் எதிர்பாராத வகையில் அபாரமாக ஆடி5-3 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெ ற்றார்.  அவர் பிளிட்ஜ் முறையிலான ஆட்டத்தில் டைபிரேக்கரில் வென்றார்.

மற்றொரு ஆட்டம் ஒன்றில் சசிகிரணு ம் ருமேனிய வீரர் கான்ஸ்டான்டினும் மோதினர்.  இதில் சசிகிரண் 2.5-1.5 என்ற கணக்கில் வென்றார். சசி 2-வது ரேபி ட் கேமில் வென்றது குறிப்பிடத்தக்கது. 

ஆனால் மற்ற இந்திய வீரர்களுக்கு நே ற்றைய தினம் மோசமான நாளாக அமைந்தது. இந்திய வீரர் பரிமர்ஜன்         நெகி உக்ரைன் வீரர் யூரியிடம் தோற்றார். 

பரிமர்ஜன் 2-4 என்ற கணக்கில் உக்ரைன் வீரரிடம் தோற்றார். முதல் டை பிரேக் கரில் கருப்புக் காய்களுடன் ஆடிய நெ கி வென்றார். ஆனால் மறு ஆட்டத்தில் அவர் தோல்வி அடைந்தார். 

இந்த உலகக் கோப்பை போட்டியில் அதிபன் பெற்ற வெற்றி 2-வது பெரிய வெற்றியாக கருதப்படுகிறது. முன்ன தாக சீன வீரர் வெய்யீ ரஷ்ய வீரர் இயா னை தோற்கடித்தார். 

ரஷ்ய வீரரான அலெக்சீவ் உலக தரவரி சையில் 50- வது இடத்தில் உள்ள வீர ராவார். அவரை விட மிகவும் பின்தங் கியுள்ள அதிபன் மிகுந்த புத்தி சாதுர்ய மாக ஆடி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றார். 

ருமேனிய வீரர் கான்ஸ்டான்டினிற்கு எதிரான ஆட்டத்தில் சசிகிரண் மிகுந்த தொழில் நுணுக்கத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றது நினைவு கூறத்தக்கது.

தேசிய சாம்பியனான அதிபன் அடுத்த தாக 2-வது சுற்றில் பிரேசில் வீரர் அலெ க்சாண்டர் பியருடன் மோத இருக்கிறார். எனவே இந்தப் போட்டி கடும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க் கப்படுகிறது. 

மொத்தம் 1.6 அமெரிக்க டாலர்களை பரிசுத் தொகையாகக் கொண்ட இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற உலகின் சிறந்த மாஸ்டர்கள் களம் இறங்கி உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago