முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்து எம்.பி.க்களுக்கு முதல்வர் மோடி நன்றி

புதன்கிழமை, 14 ஆகஸ்ட் 2013      இந்தியா
Image Unavailable

 

ஆமதாபாத்,ஆக.15 - இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பேச வருமாறு அழைப்பு விடுத்துள்ள அந்த நாட்டு எம்.பி.க்களுக்கு குஜராத் மாநில பாரதிய ஜனதா முதல்வர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் உரையாற்ற அழைப்பு விடுக்கப்பட்டது. இதை நரேந்திர மோடி ஏற்றக்கொண்டார். ஆனால் அவர் வகுப்பு கலவரத்தை தூண்டிவிட்டதாக கூறி அவருக்கு விசா கொடுக்க அமெரிக்க அரசு மறுத்துவிட்டது. இது ஒரு பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. மோடிக்கு விசா கிடைக்க பாரதிய ஜனதா மேலிடம் பல்வேறு வழிகளில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 

இந்தநிலையில் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் உரையாற்ற லண்டன் வருமாறு அந்த நாடு எம்.பி.க்கள் பலர் சேர்ந்து அழைப்பு விடுத்துள்ளனர். நவீன இந்தியாவின் எதிர்காலம் என்ற தலைப்பில் பேச வருமாறு இங்கிலாந்து நாட்டு பேரி கார்டினர் என்பவர் கடந்த வாரம் மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். இதற்கு மோடி நன்றி தெரிவித்து தனது இணையதளத்தில் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் பேச்சுவார்த்தையானது ஜனநாயகத்தை வலுப்படுத்துகிறது. பேச்சுவார்த்தைக்கு மாற்ற வழி எதுவும் இல்லை. பேச்சுவார்த்தையானது நம்மை ஒருங்கிணைந்து நல்ல வழியில் செயல்பட வைக்கிறது என்று அந்த கடிதத்தில் மோடி எழுதியுள்ளார். என்னை பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைத்துள்ள இங்கிலாந்து நாட்டு எம்.பி.க்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தொழிலாளர் கட்சியை சேர்ந்த எம்.பி. ஒருவர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் உங்களுடை பேச்சை கேட்க அனைவரும் ஆவலுடன் இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்