முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் ராணுவம் 4 நாளில் 9 தடவை அத்துமீறல்

புதன்கிழமை, 14 ஆகஸ்ட் 2013      உலகம்
Image Unavailable

 

ஜம்மு,ஆக.15 - பாகிஸ்தான் ராணுவமானது அத்துமீறலில் ஈடுபடுவதை வழக்கமாக வைத்திருக்கிறது. கடந்த 4 நாட்களில் 9 தடவைகள் அத்துமீறி இந்திய காவல்நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளன. 

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் எல்லையையொட்டி பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர்ந்து ஊடுருவல், அத்துமீறல், இந்திய காவல் முகாம்கள் மீது தாக்குதல் போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறது. கடந்த செவ்வாய் இரவில் ஜம்மு-காஷ்மீரில் எல்லை கட்டுப்பாடு கோடு அருகில் அமைக்கப்பட்டுள்ள 16 இந்திய காவல் முகாம்கள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டன. இதற்கு இந்திய ராணுவத்தினரும் தக்க பதிலடி கொடுத்தனர். இதனால் செவ்வாய் இரவு 11.30 மணி வரை பயங்கர சண்டை நடந்தது. இந்த சம்பவம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஹமிபூர்-பாலகோதே பகுதியிலும் மெந்தர் பகுதியிலும் நடந்தது. இந்த அத்துமீறலில் பாகிஸ்தான் ராணுவத்தினர்களுடன் தீவிரவாதிகளும் சேர்ந்துள்ளனர் என்று இந்திய பாதுகாப்பு முகாம்களில் இருந்த ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கடந்த 6-ம் தேதி பாகிஸ்தான் ராணுவத்தினர் திடீரென்று எல்லைக்கட்டுப்பாடு கோட்டை மீறி வந்து துப்பாக்கியால் சுட்டதில் இந்திய ராணுவத்தினர் 5 பேர் வீரமரணம் அடைந்தனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன்பின்னர் கடந்த 10-ம் தேதியில் இருந்து நேற்றுவரை 9 தடவைகள் பாகிஸ்தான் ராணுவத்தினர் போர்நிறுத்த மீறலில் ஈடுபட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago