முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹசாரே தலைமையில் நியூயார்க்கில் சுதந்திர தினப் பேரணி

புதன்கிழமை, 14 ஆகஸ்ட் 2013      ஊழல்
Image Unavailable

 

பாஸ்டன், ஆக. 15 - அமெரிக்காவில் இந்த ஆண்டு இந்திய சுதந்திர தினப் பேரணி சமூக சேவகர் அண்ணா ஹசாரே தலைமையில் நடைபெற உள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இந்தியச் சங்கங்களின் கூட்டமைப்பு ஆண்டுதோறும் இந்திய சுதந்திர தினப் பேரணியை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு, வரும் 18ஆம் தேதி நடைபெற உள்ள இப்பேரணிக்கு தலைமை தாங்குமாறு சமூக சேவகர் ஹசாரேவுக்கு இந்த அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இதை ஏற்றுக் கொண்டுள்ள ஹசாரே, 16ஆம் தேதி அமெரிக்கா செல்கிறார்.

நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்துக்குச் செல்லும் அவர், கேப்பிடல் ஹில் பகுதியில் அமெரிக்க எம்.பி.க்களைச் சந்திக்க உள்ளார். தவிர, சான் பிரான்சிஸ்கோ, மேரிலாண்ட், வார்டனில் பென்சில்வேனியா பல்கலைக்கழகம், கொலம்பியா பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் கலந்துரையாடத் திட்டமிட்டுள்ளார். ஊழல் எதிர்ப்பு தொடர்பாக ஹசாரே நடத்தும் உரையைக் கேட்க அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் மட்டுமின்றி, அமெரிக்கர்களும் ஆர்வமாக உள்ளனர். அவரிடம் பேட்டி கண்டு ஒளிபரப்ப அமெரிக்க டிவி சேனல்கள் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன. தனது அமெரிக்கப் பயணத்தின்போது நாஸ்டாக் பங்குச் சந்தைக்குச் சென்று, அங்குள்ள மணியை ஒலிக்கச் செய்து, பங்கு விற்பனையைத் தொடங்கி வைப்பார். அவருக்கு தெற்கு கரோலினா மாகாண ஆளுநரான இந்திய-அமெரிக்கர் நிக்கி ஹேலி விருந்தளிக்க உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்