முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சோனியாவுக்கு வக்காலத்து வாங்கும் பகுஜன் - சமாஜ்வாடி

புதன்கிழமை, 14 ஆகஸ்ட் 2013      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, ஆக. 15 - மருமகன் ராபர்ட் வதேராவின் நிலக் கொள்ளை விவகாரத்துக்காக காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாவை எப்படி பொறுப்பாக்க முடியும் என்று வரிந்து கட்டிக் கொண்டு வக்காலத்து வாங்கியுள்ளன பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி கட்சிகள். நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் கேள்வி நேரத்தை ஒத்தி வைத்து விட்டு அரியானாவில் சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேரா நிகழ்த்திய நிலக் கொள்ளை விவகாரம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதனால் அவை நடவடிக்கைகள் மாலை 3 மணிவரை அடுத்தடுத்து ஒத்திவைக்க வேண்டிய நிலை உருவானது.

இது தொடர்பாக பேசிய பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும், முன்னாள் உத்தரபிரதேச மாநில முதல்வருமான மாயாவதி, ராபர்ட் வதேரா மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் தலைவர் எப்படி பொறுப்பு ஏற்க முடியும்?. சோனியா காந்தி இதற்கு பொறுப்பேற்று கொண்டால் எங்கள் கட்சி அதற்கு அனுமதிக்காது. யாரோ ஒருவர் தவறு செய்திருக்கலாம். அவர்களது உறவினர்களுக்கு தண்டனை கொடுக்க கூடாது என்றார்.

இதேபோல் சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் நரேஷ் அகர்வால், பாரதிய ஜனதா கட்சி இந்த விவகாரத்தை அரசியலாக்குகிறது. இது ஒரு மாநில அளவிலான விவகாரம். மாநில அளவிலே இந்த பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago