முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக். கிரிக்கெட் அணிக்கு விசா: மத்திய அரசு பரிசீலிப்பு

புதன்கிழமை, 14 ஆகஸ்ட் 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஆக. 15 - பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு விசா கொடுப்பதற்கு முன்பாக அனைத்து அம்சங்களும் பரிசீலிக்கப்படும் என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் சையத் அக்பருதீன், சாம்பியன்ஸ் லீக் டி 20 போட்டிகளுக்காக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியினருக்கு விசா கோரியுள்ளனர். போட்டி தற்போது நடைபெறவில்லை. அந்த அணியினருக்கு விசா வழங்கப்படுவதற்கு முன்பாக கவனமாக அனைத்து அம்சங்களும் பரிசீலிக்கப்படும் என்றார்.

ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி 5 இந்திய வீரர்களைக் கொலை செய்துள்ள நிலையில் அந்நாட்டு கிரிக்கெட் அணியினருக்கு விசா வழங்கினால் பெரும் சர்ச்சை ஏற்படும் என்பதால் மத்திய அரசு கவனமாக செயல்படுவதாகவும் கூறப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்