முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிருஷ்ணா நதி தண்ணீர் சென்னைக்கு கிடைப்பதில் காலதாமதம்: ஆந்திரா அலட்சியம் சென்னை, மே.- 8 - தமிழக ஆந்தர மாநில அரசுகளின் நதிநீர் பகிர்வு ஒப்பந்தபடி, கிருஷ்ணா நதியிலிருந்து சென்னைக்கு தரவேண்டிய தண்ணீரை தராமல் ஆந்திர அரசு அதிகாரிகள் காலதாமதம் செய்வதால் சென்னைய

ஞாயிற்றுக்கிழமை, 8 மே 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, மே.- 8 - தமிழக ஆந்தர மாநில அரசுகளின் நதிநீர் பகிர்வு ஒப்பந்தபடி, கிருஷ்ணா நதியிலிருந்து சென்னைக்கு தரவேண்டிய தண்ணீரை தராமல் ஆந்திர அரசு அதிகாரிகள் காலதாமதம் செய்வதால் சென்னையில் குடிநீர் தட்டுபாடு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சென்னை நகர மக்களின் குடிnullர் தேவையை nullர்த்தி செய்ய nullண்டி, சோழவரம், செங்குன்றம், செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. இவை தவிர ஆந்திரா மாநிலம் கண்டலேறு அணையில் இருந்தும் தண்ணீர் பெறப்படுகிறது. இதற்காக கிருஷ்ணா நதிnullர் திட்டம் செயல் படுத்தப்பட்டுள்ளது. nullண்டி, சோழவரம், செங்குன்றம், செம்பரம்பாக்கம் ஏரிகளில் தற்போது தண்ணீர் அளவு மிகவும் குறைந்து விட்டது. எனவே கிருஷ்ணா தண்ணீர் அவசியம் தேவை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு உயர் அதிகாரிகள் சமீபத்தில் ஆந்திராவுக்கு சென்று nullர்வளதுறை அதிகாரிகளை சந்தித்து, கிருஷ்ணா தண்ணீரை திறந்து விட கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்று உடனடியாக கண்டலேறு அணையில் தண்ணீர் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இதுவரை தண்ணீர் திறந்து விடப்படவில்லை. கடந்த ஆண்டும் ஜூலை மாதம் திறந்து விடப்பட வேண்டிய கிருஷ்ணா தண்ணீர் மிகவும் தாமதமாக அக்டோபர் மாதம் தான் திறந்து விடப்பட்டது என்றாலும் கடந்த ஜனவரி மாதம் இறுதி வரை கிருஷ்ணா தண்ணீர் வந்தது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு கண்டலேறு அணை மூடப்பட்டது. தற்போது கண்டலேறு அணையில் சுமார் 41 ஆயிரம் மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. மொத்த கொள்ளளவான 68 ஆயிரம் மில்லியன் கன அடியில் முக்கால் பாகம் தண்ணீர் உள்ளதால் கிருஷ்ணா தண்ணீர் திறந்து விடலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆந்திரா​தமிழ்நாடு இரு மாநிலங்களுக்கும் இடையே செய்யப்பட்டுள்ள நதிnullர் பகிர்வு ஒப்பந்தப்படி ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரையிலான 4 மாத காலத்துக்கு ஆந்திரா 4 டி.எம்.சி. தண்ணீரை கண்டலேறு அணையில் இருந்து விட வேண்டும் இந்த கால அவகாசம் முடிந்து ஒரு வாரம் ஆகி விட்ட நிலையில் இன்னும் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இது தொடர்பாக ஆந்திர மாநில nullர்ப்பாசன அதிகாரிகள் இன்னும் முடிவு எதுவும் எடுக்கவில்லை என்று தெரிய வந்துள்ளது. எனவே ஜனவரி​ ஏப்ரல் மாதங்களுக்கான தண்ணீர் கிடைப்பது மேலும் தாமதமாகலாம் என்று தெரிய வந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்