முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யார் ஆட்சியில் வளர்ச்சி என்பதை விவாதிக்க தயாரா? மோடி

வியாழக்கிழமை, 15 ஆகஸ்ட் 2013      இந்தியா
Image Unavailable

 

ஆமதாபாத்,ஆக.16 - என்னுடைய ஆட்சியில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதா? அல்லது உங்கள் ஆட்சியில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து பொதுமேடையில் விவாதிக்க தயாரா என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு குஜராத் பாரதிய ஜனதா முதல்வர் நரேந்திர மோடி சவால் விடுத்துள்ளார். மேலும் பிரதமரின் சுதந்திர தின உரையில் பல முக்கிய பிரச்சினைகள் குறித்து இடம் பெறவில்லை என்றும் மோடி குற்றஞ்சாட்டி உள்ளார். 

டெல்லி செங்கோட்டையில் நேற்று பிரதமர் மன்மோகன் சிங் தேசிய கொடியை ஏற்றி உரையாற்றினார். அதனையடுத்து மாநிலங்களில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநில முதல்வர்கள் தேசிய கொடியை ஏற்றிவைத்து உரையாற்றினர். அதேமாதிரி குஜராத் மாநில தலைநகர் ஆமதாபாத்திலும் பா.ஜ.முதல்வர் நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றிவைத்து உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில் குஜராத் மாநிலத்தில் என்னுடைய ஆட்சியிலும் நல்ல நிர்வாகத்திலும் ஏற்பட்டுள்ள வளர்ச்சி குறித்தும் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியிலும் நிர்வாகத்திலும் டெல்லி மற்றும் காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி குறித்து பொதுமேடையில் விவாதிக்க தயாரா என்று பிரதமருக்கு மோடி சவால் விடுத்தார். மேலும் பிரதமரின் சுதந்திர தின உரையில் பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளின் ராணுவ அத்துமீறல், நாட்டில் பொருளாதார வீழ்ச்சி, அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு குறைவு குறித்து பிரதமர் மன்மோகன் சிங் எதுவும் கூறாததற்கு மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி சுட்டதில் இந்திய ராணுவ வீரர்கள் 5 பேர் கொல்லப்பட்டது குறித்து மன்மோகன் சிங் தனது உரையில் எதுவும் குறிப்பிடாதது பெரும் வருத்தம் அளிக்கிறது. இந்திய ராணுவ வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் பிரதமர் எதுவும் குறிப்பிடவில்லை. நாடு சுதந்திரம் அடைந்து முதலாவது சுதந்திர தின விழாவில் நாட்டின் முதல்வர் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறிப்பிட்டதையே மன்மோகன் சிங்கும் தற்போது கூறியுள்ளார். நாட்டின் வளர்ச்சிக்கு அவர் எதுவும் கூறவில்லை என்றும் மோடி குற்றஞ்சாட்டினார். ஆனால் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தனது உரையில் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்று குறிப்பிட்டிருப்பது பாராட்டுக்குரியது. ஆனால் அவர் எந்த பிரச்சினைக்காக அவர் இவ்வாறு கூறினார் என்பது தெரியவில்லை. அவரும் விளக்கவில்லை என்றும் மோடி தனது உரையில் மேலும் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்