முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுதந்திர தினம்: செங்கோட்டையில் பிரதமர் கொடியேற்றினார்

வியாழக்கிழமை, 15 ஆகஸ்ட் 2013      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, ஆக. 16 - நாட்டின் 67வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மன்மோகன்சிங் நேற்று காலையில் தேசியக் கொடியேற்றினார். நாடு முழுவதும் 67-வது சுதந்திர தினம் நேற்று எழுச்சியோடு கொண்டாடப்பட்டது.  இதையொட்டி நேற்று காலை பிரதமர் மன்மோகன் சிங் டெல்லி ராஜ்காட்டில் அமைந்துள்ள தேசப் பிதா மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினார். பல்வேறு தலைவர்களும் காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். பின்னர் காலை 7.30 மணி அளவில் டெல்லி செங்கோட்டைக்கு வந்த பிரதமரை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி வரவேற்றார். இதனையடுத்து தரைப்படை, கப்பற்படை, விமானப்படை என முப்படை வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை பிரதமர் ஏற்றார். இதைத் தொடர்ந்து 21 குண்டுகள் முழங்க பிரதமர் மன்மோகன்சிங் நாட்டின் தேசியக் கொடியான மூவர்ணக் கொடியை காலை 8.13 மணிக்கு ஏற்றி நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் சபாநாயகர் மீராகுமார், மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். சுதந்திர தின விழாவை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன. வாகன சோதனைகளும் அதிரடியாக நடத்தப்பட்டன. தலைநகர் டெல்லியைப் போல் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் சுதந்திர தின விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாவட்ட தலைநகரங்களில் கலெக்டர்கள் தேசிய கொடியேற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர். காங்கிரஸ் தரப்பிலும் சுதந்திர தின விழா நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்டது. டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் அக்கட்சி தலைவர் சோனியா கொடியேற்றினார். இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago